2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
சலசலப்புக்கு அஞ்சாமல் செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை 2, 8-ம் இடங்களில் அமர்ந்த ராகு / கேது 21.03.2022 முதல் உங்களின் ராசியிலும், ஏழாமிடத்திலும் அமர்கிறார்கள்.
இதுவரை தனவரவு இருந்தாலும், அதனை சேமிக்க முடியாமல் சிரமம் கொண்டு, வந்த வருமானத்தை செலவு செய்து வந்தீர்கள். திருமண தடையால் திருமண வரன் வந்தும் அமையாமல் இருந்து வந்தது. குடும்பத்தில் சந்தோசமின்மையும், அதனால் மன சஞ்சலம் கொண்டிருந்தீர்கள். இனி வரும் ராகு / கேது அமர்வு, சுறுசுறுப்பும், எதையும் பேச்சால் வெல்லும் வலிமையும் கொண்டு விளங்குவீர்கள். சூரியன் நட்சத்திர சாரத்தில் ராகு இருக்கும் காலம் சிலருக்கு அரசு சார்ந்த நன்மையும், சலுகைகளும் கிடைக்க பெறுவீர்கள். அரசியலில் புதிய பதவி கிடைக்கும். சுக்கிரன் சாரத்தில் இருக்கும் காலம் திருமண தடை நீங்குதல், பரிகாரம் செய்வதன் மூலம் ஜாதக தோசம் நிவர்த்தி ஆவது. வழிபாடு மூலம் திருமண வாய்ப்புகளையும் பெறுவீர்கள். வாகன வசதிகளும். பெண்களுக்கு நல்ல வரன் அமைவதும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் வாய்ப்புகளை பெறுவீர்கள். சரியான பாதையை தேர்வு செய்து அதனை பயன்படுத்தி நல்ல வளம் பெறுவீர்கள். வாகனம் வாங்குதல், மேல் சிகிச்சை மூலம் உடல் நலனை பேணி பாதுகாத்தல், புதிய தொழில் துவங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கேது சாரத்தில் ராகு இருக்கும் போது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும். அவசர முடிவு ஆபத்தாய் முடியும் எச்சரிக்கை தேவை.
உங்களின் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது. களத்திர தோசம் நிவர்த்தியாகும். பல நாட்கள் வெளிநாடு வேலையின் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். வெளிநாட்டு தொழிலில் கூட்டு முயற்சி நல்ல பலனையும், பொருளாதாரத்தையும் மேம்பட செய்யும் குரு சாரத்தில் கேது அமரும் போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்பவர்கள் தன் பணத்தை இழப்பார்கள். ராகு சாரத்தில் கேது அமரும் போது அறுவை சிகிச்சை வரை சென்று பின்பு அதை விடுத்து சாதாரண சிகிச்சை மூலம் குணம் அடைவார்கள். குழந்தையின்மை குறைகள் சிலருக்கு நீங்கும். செவ்வாய் சாரத்தில் கேது அமரும் காலம் தட்டி கழித்த பல காரியங்களுக்கு உயிர் உண்டாகும். கடந்த கால கனவுகள் நிறைவேறும். மனத்தில் தைரியம் உண்டாகும்.
பரிகாரம்:
செவ்வாய் கிழமை ராகு காலத்தில் (3-4 மணிக்குள்) துர்க்கை அம்மனுக்கு தேசிக்காய், எலுமிச்சை தோலில் நெய் / இலுப்பெண்ணெய் இட்டு விளக்குகேற்றி தொடர்ந்து வழிபாடு செய்து வர சகல காரியங்களும் சித்தியாகும். பொருளாதாரம் வளம் பெறும்.
R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554