ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - கன்னி

திட்டமிட்டு செயல்பட்டு, பலனைப் பெறும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் கன்னி ராசியில் கேதுவும், ஏழாமிடத்தில் ராகும் அமர்ந்து பலன் தருவார்கள். எதையும் ஷண நேரத்தில் செய்து முடிக்கும் தைரியமும், துணிச்சலும் உண்டாகும்.
 
கடந்த கால கஷ்டங்களிலிருந்து மீண்டு, இனி உங்களை செயல்பாடுகளை துரிதபடுத்திக் கொள்வீர்கள். சிறு பாதிப்பை கூட தாங்கிக் கொள்ளமாட்டீர்கள். உறுதியான முடிவுகளை எடுத்த தயக்கம் காட்டமாட்டீர்கள்.
 
உறவுகள்.. உரிமை எடுத்துக் கொண்டால் ஏற்பீர்கள். வாதம் செய்தால் துண்டித்துக் கொள்வீர்கள். கணவன்- மனைவி உறவு பலப்படும். அடிக்கடி சில சிறு சண்டைகள் வந்து மறையும். தெற்கு திசை பயணம் பயனுள்ளதாக அமையும்.
 
பச்சை நிற ஆடை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி நற்பலனை கொடுக்கும். நண்பர்களின் சேர்க்கைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முக்கிய விடயங்களில் உங்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்வீர்கள். 
 
கேதுவின் செயல்களால் உங்களின் திடமான நம்பிக்கைக்கு வழி கிடைக்கும். நூதனமான காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். சரியான நேரத்தில் காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
 
சிலர் சமயோசிதமாக செயல்பட்டு, அனைத்து விடயங்களில் நன்மையை அடைவீர்கள். கலைஞர்களுக்கு திட்டமிட்டபடி, பாராட்டுடன் நிகழ்ச்சிகளை செய்து முடிப்பீர்கள்.
 
பொது வாழ்வில் இருப்பவருக்கு சில பொறுப்புகள் தேடி வரும். காரியத் தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். தொழிலில் பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும்.
 
பரிகாரம்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து நாகம் தலையில் கூடிய அம்மன், கருமாரி, நாக தேவதைகளை வணங்கி, நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள மேன்மை உண்டாகும்.