ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - ரிஷபம்

தெளிவான விடயங்களை கையாண்டு மேன்மை பெறும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணியஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் பலன் தருகிறார்கள். உங்களின் தொழிலில் பல காலம் முன்னேற்றமின்றி இருந்த நிலை மாறி சற்று முன்னேற்றம் உண்டாகும். 
 
குரு விரையஸ்தானத்தில் இருப்பதால் தங்க நகைகளை அடவு வைத்து தொழில் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இது முதலீடாக இருந்தாலும், தொழிலில் சிலருக்கு முன்னேற்றத்தை தரும். 
 
ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆற்றலும், அறிவு மேன்மையும் உண்டாகும். தனியார் துறையில் நல்ல சம்பளமும், நல்ல வளத்துடன் வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். சிலருக்கு உத்தியோகத்திலிருந்து புதிய இடமாற்றமும், இடமாற்றத்தால் வீண் அலைச்சலும் உண்டாகும். 
 
கேது உங்களுக்கு பூர்வ புண்ணியஸ்தானத்தில் இருப்பது உங்களின் புத்திரன், புத்திரியால் கல்வி மேம்பாட்டுக்கு புதிய கடன்படும் நிலை வரும். இதுவும் சுப செலவாக அமையும். 
 
சிலருக்கு திருமணம் நடத்துவதற்கு தேவையான பணம் தயாரிக்க வேண்டி வரும். எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் நல்ல பலனைத் தரும்.
 
பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுகள் சமரசமாக இருக்காது. ஏதாவது தடையை அடைய வேண்டி வரும். சிலருக்கு முயற்சிகளில் கால தாமதமானாலும், விரைவில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெண்களின் வாழ்க்கை சுபிட்சமாக அமையும்.
 
பரிகாரம்:
 
செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர, உங்களின் காரியம் தடையின்றி நடக்கும். விநாயகர் வழிபாடு, விநாயகர் உருவப் படம் பொறித்த டொலரை வைத்துக் கொள்வது நல்லது.