2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மேஷம்
விரும்பியதை விரும்பியபடி அமைத்துக் கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!
இந்த வரும் 01-05-2024 முதல் இதுவரை ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் இனி தனஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன வரவுகளும். நன்மையும் பெற கூடிய பாக்கியம் உண்டாகும்.
உங்களின் பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்து ஆறாமிடத்தையும், எட்டாமிடத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். காரணமில்லாத கடன்படுவது, உடல் நலகுறைவு, எதிர்ப்புகள் இதிலிருந்து உங்களின் வளர்ச்சி பாதைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
உடல் நலனில் சிறு செலவு செய்து, குணமடையும் வாய்ப்புகள் ஏற்படும். எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் மறையும். பல காலம் நிலுவையில் இருந்து வந்த வழக்கு முடிவுக்கு வரும். கருத்து வேற்றுமையில் பிரிந்த தம்பதியினர் இணைவதற்கான கால கட்டம் அமைய பெறும்.
சட்ட துறைமினருக்கு பதவி உயர்வும், மேலதிகாரிகளின் மூலம் காரிய அனுகூலம் செய்து கொள்ளும் வாய்ப்புகளும் அமையும். சிலருக்கு வங்கி கடன் மூலம் தொழில் துவங்கவும் பழைய தொழிலை புதுபித்துக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். சரியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய நிறைய நண்பர் வந்து சேருவார்கள்.
தங்க நகை அடவு வைத்து சிலர் தொழிலில் முதலீடு செய்யும் சூழ்நிலை உருவாகும். இதனால் வளர்ச்சி ஏற்பட்டு மேன்மை அடைவீர்கள். கலைதுறையினருக்கு தேவையான வசதிகள் வந்து சேரும். உயர் கல்வி பயில ஆதரவுகள் கிடைக்கப் பெற்று, உங்களின் ஆசை நிறைவேறும். மறைவு ஸ்தானங்களை குரு பார்வை இடுவது கெடுபலன்கள் குறையும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலையில் சிறந்த உயர் நிலை அடைவீரகள்.
பரிகாரம்:
குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் மூன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல காரியங்களும் நன்மையை தரும்.