2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கடகம்

காலத்தையும் சூழ்நிலையும் அறிந்து தன்னை வளபடுத்தி கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்ப்பதும் பாக்கியஸ்தானத்தில் புதன் அமர்வதும் உங்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்வதால் ஏதாவது புதிய கடன் பெறுவதும், பழைய கடனை அடைக்க முயற்சி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள்.
உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வதால் கேது பெயர்ச்சி வரை உங்களின் எதிர்கால நன்மைகளுக்கான முயற்சிகள் வெற்றியை பெற்று தரும். அதன்பின்பு பேச்சை குறைத்து கொண்டு செயலில் இறங்குவீர்கள். குரு பார்வை கேதுவுடன் இணைவதால் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.
அரசியலிலும் பொது வாழ்விலும் சிறந்த முன்னேற்றம் காண்பதுடன் படைய நண்பர்களின் தொடர்பு மூலம் நன்மைகள் உண்டாகும். உங்களின் யோகாதிபதி செவ்வாய் ராசியில் அமர்ந்து நீசம் பெற்றாலும் உங்களுக்கு ஏதாவது வழிகளில் ஒத்துழைப்பு தருவதுடன் கஷ்டபடும் காலங்களில் உதவிகள் கிடைக்கும். பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்ந்து குருவை பார்ப்பதும் கூட்டு தொழிலில் ஸ்தானத்தை பார்ப்பதும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும்.
தொழில் சார்ந்த தொடர்புகள் உண்டாகும். உண்மையான லட்சியங்களுக்கு எந்த தடையும் வராது அதே நேரத்தில் நேர்மைக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடும் போது பிரச்சனைகள் வேறு மாதிரி கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு சில கஷ்டங்கள் நீங்கி படிபடியாக நன்மை உண்டாகும். இந்த ஆண்டு முழுவதும் உங்களின் செயல்கள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தன்னிறைவு பெறும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 9.
அதிர்ஷ்ட மாதங்கள்:
மார்ச், ஏப்ரல், ஜுலை, செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
பரிகாரங்கள்:
திங்கள்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்து வில்வ இலை அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்கி வர உங்களின் சகல பிரச்சனைகளும் தீர்ந்து நன்மை அடைவீர்கள்.