விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - கும்பம்

தன் கடமை செய்து, பிறரிடம் பலனை எதிர்பார்க்காத கும்ப ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு ஆண்டின் துவக்கத்தில் ராசியில் ராசிநாதனுடன் இணைவு பெறுவதும் அடுத்து சுகஸ்தானத்தில் அமர்ந்த குரு இனி பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் ராசிக்கு சிறப்பான நற்பலனை பெற்றுத் தரும். எதையும். யோசித்து செய்யும் உங்களிடம் வலிமையும், திறமையும் உண்டாகும்.
இந்த ஆண்டு வரும் 26-04-2025 முதல் ராகு ராசியிலும், ஏழாமிடத்தில் கேதுவும் அமர்ந்து இந்த படி பலன் தருகிறார்கள். சனியுடன் ராகு இணைவது மந்திரீகத்தின் மீது நம்பிக்கை வைத்து அது சம்மந்தமான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். சிலரின் சுய ஜாதகத்தில் சனி கெட்டிருந்தால் மந்திரீகத்தால் பாதிப்பு உண்டாகலாம். எனினும் குரு பார்வை ஒராண்டு காலம் இருப்பதால் பாதிப்புகள் எதுவும் வராமல் தடுத்து விடுவார். களத்திரஸ்தானத்தில் கேது கூட்டு தொழில் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வெற்றி பெற செய்வது எதிலும் உறுதியுடன் செயல்படுதல். அரசாங்க பதவி, அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் அமையும்.
இந்த ஆண்டு குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது உங்களின் ராசியை பார்ப்பது மிக சிறந்த நற்பலன் உண்டாகும். தடைபட்ட திருமண உடனே நடக்கும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். சிறப்பான பயிற்சிகள் எடுத்த கொண்டு செயல்படுவீர்கள். முக்கிய காரியங்களில் முழு ஈடுபாடுகள் கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவது தொழிலில் ஒரளவு முன்னேற்றம் உண்டாகும். கேட்டவருக்கு கேட்டதை தினமும் கொடுக்கும் தெய்வ நம்பிக்கையுடன் வணங்கி நீங்கள் வேண்டியதை பெறுவீர்கள். கேது குருவை பார்ப்பதால் ஆன்மீகவாதிகளின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும். மகான்களின் ஆசி பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வியாழன்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 7, 8.
பரிகாரங்கள்:
அம்மன் வழிபாடு, வராஹி வழிபாடுகள் செய்து தேங்காயில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ள மானசீகமாக சிறப்பான நற்பலன் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.