ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மகரம்
எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பு கொண்ட மகர ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்து முயற்சி ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்றும் இருப்பதால் தடைபட்ட சில காரியங்கள் நன்மை தரும். போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மேலும் நன்மையை பெறுவீர்கள். முக்கியமான பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்வில் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றுத்தரும்.
புதிய தொழில் துவங்குதல். வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் அன்பர்களுக்கு வேலை கிட்டும். அரசியலில் பெரிய மாற்றங்கள் உண்டாகும். நேர்மையான உங்களின் போக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு பெற செய்யும். கவலைகளை மறந்து புத்துணர்வுகளை பெறுவீர்கள்.
சமயத்திற்கு தகுந்தபடி சில நேரம் உங்களின் செயல்களை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். கலைதுறையினர் கலை நிகழ்ச்சிகளில் மீண்டும் தொடர்ந்து செயல்படும் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். குரு பெயர்ச்சி ஏப்ரலில் வரும் போது குரு அருளால் உங்களின் தேவைகளையும் வெளிநாட்டு உதவிகளையும் பெற்று தொழிலிலும் உத்தியோகத்திலும் வளம் பெறுவீர்கள்.
உங்களின் பாத சனியாக சனி அமரும் போது யோக சனியாக வாழ்வில் இதுவரையிலும் இழந்த அத்தனையும் மீண்டும் கிடைக்க பெறுவீர்கள். ஏழரை சனி காலங்களின் பட்ட துன்பங்களை அனுபவமான எடுத்துக் கொண்டு உங்களை தெளிவுபடுத்தி கொண்டு எல்லா நன்மைகளையும் பெறுவீர்கள்.
மக்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். சொந்தங்கள் பிரிந்தவர் இணைவார்கள். எதையும் மனகஷ்டமாக எண்ணாமல் எளிமையாக எடுத்துக் கொள்வீர்கள். வேகத்தை அதிகப்படுத்தாமல் நிதானமாக செல்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 6, 9.
அதிர்ஷ்ட மாதங்கள்:
மே, ஜுன், ஜுலை, டிசம்பர்.
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் வைரவருக்கு வெண் நிற பூ நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள எல்லாம் சரியாகி நற்பலன்களை பெற்று வாழ்வீர்கள்.