டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து சேலை செய்யும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்தும். குரு லாபஸ்தானத்தில் அமர்ந்தும் இருப்பது  உங்களின் லட்சய கனவுகள் சிறப்பாக இயங்க செய்யும் தனாதிபதி சூரியன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் அனைத்து காரியங்களிலும் நன்மையை தரும். 
 
உங்களின் யோகாதிபதி செவ்வாய் ராசியில் அமர்ந்தாலும் நீசம் பெறுவதால் சிலருக்கு எடுத்த காரியம் தடைபடும். முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பது நல்ல முன்னேற்றமாக அமையும். எதிலும் நினைத்த காரியத்தை அடைய வைக்க பல வழிகளில் முயற்சி செய்வீர்கள். பல காரியங்கள் சாதகமாக அமையும்.
 
அரசியலில் உங்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்றாலும் கூட வாழ்க்கைக்கு எது தேவை எது அவசியம் என்று உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகங்கள் உங்களுக்கு புத்துர்ணவுகளை தரும். ஏன் எதற்கு என்று கேட்டவர்களுக்கு தக்க பதிலடி தருவீர்கள்.
 
பொது வாழ்வில் உங்களின் அனுபவம் எதிர்கால நலனை பற்றி சிந்திக்கும்படி அமையும். வாழ்நாளில் அதன் வழியில் உங்கள் பயணம் வெற்றிகரமாகவும் தெளிவாகவும் அமையும் அடுத்தவர் பார்வைக்கு உங்களின் செயல் நிதானமாக தெரியும். நீங்கள் எதிலும் செயலில் தன்மையை உணர்ந்து அதிலிருந்து மிளவும், அதனை எப்படி செய்தால் நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும் மென்று செயல்படுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு கலை ஆர்வம் இருக்கும். அதனை செயல்படுத்தி சில காலம் பொருத்திருக்க வேண்டும். எல்லாம் நன்மையாக அமையும். கன்னி கரில்லா காரியங்களில் ஆச்சரியமான விசயம் நடந்து பிரம்மித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
.07-12-2024 சனி அதிகாலை 04.28 முதல் 09-12-2024 திங்கள் காலை 07.36 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு அன்று ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு வைரவர் வழிபாடு செய்து எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை சாத்தி எள் அன்னம் வைத்து வழிபட்டு வர உங்களின் அனைத்து காரியமும் நன்மையை தரும்.