டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்
![டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்](news-images/varImage_1733393394.jpg)
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து காரியமும் தானே செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக் ராசியில் குருவும் தொழில் ஸ்தானத்தில் சனியும், அமர்ந்து உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செயல்களும் உண்டாகும் வழியை தேடுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் நமது தேவைகளுக்கு தனது விருப்பங்களுக்கு தகுந்தபடி சகல காரியங்களையும் செய்து கொள்வீர்கள். அரசியலில் புதிய பதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
உங்களின் பூர்வ புண்ணியாதிபதி புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் தந்தையின் தொழிலை தானும் செய்யும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். நீங்கள் நீண்ட நாட்களாக விரும்புகின்றாரிடம் உங்களின் காதல் விருப்பத்தை சொல்லாமல் இருந்து வந்தீர்கள். இம்மாதம் அதனை வெளிபடுத்துவீர்கள். உங்களின் ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் இருப்பதால் உடனே அதற்கு பதில் தரவில்லை என்றாலும் கூட அதை புரிந்து கொள்வார்கள்.
பொது வாழ்வில் நீங்கள் உங்களின் அன்புக்கு உரியவர்களுக்கு முடிந்து அளவு உதவிகளை செய்வீர்கள். சிலருக்கு அரசியலில் புதிய பதவி கிடைக்க பெறுவீர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் உறுதியுடன் இருந்து செயல்படுவீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும். நினைத்தபடி செயல்பட்டு வளம் பெறுவீர்கள். பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
உங்களின் முயற்சிகளில் சிறிய தடை வந்து கொண்டிருக்கும் அதனை எளிதில் தீர்த்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில நிகழ்ச்சி அமையும். உங்களின் எண்ணம் போல அமையாமல் விருப்பமின்றி கலந்து கொள்வீர்கள். பொருளாதாரத்திலும், பணபுழக்கத்திலும் ஓரளவு தன்மிறைவு பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
.02-12-2024 திங்கள் மாலை 04.39 முதல் 04-12-2024 புதன் கிழமை இரவு 11.40 மணி வரை.
29-12-2024 ஞாயிறு இரவு 12.19 முதல் 01-01-2025 புதன் கிழமை காலை 07.36 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09.00 - 10.30 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 9 முறை வலம் வந்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக தடையின்றி நடக்கும்.