ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

காலத்தை அறிந்து, அதற்கு தக்கபடி செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதும், பாக்கியாதிபதி குரு லாபஸ்தானத்தில் அமர்ந்து பார்வையிடுவதால்.. குரு பார்க்குமிடம் சிறப்பான பலன்களைப் பெற்று தரும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்ல விடயங்களை சொல்லி பாராட்டைப் பெறுவீர்கள். நினைத்த காரியத்தை விரைவாக செய்து முடித்து நன்மைப் பெறுவீர்கள்.
 
அரசியலில் இனி வாய்ப்பு இல்லை என்று நினைத்த உங்களுக்கு முன்பு இருந்த நன்மதிப்பு தொடரும். காலத்தையும், சூழ்நிலையும் கருதி நீங்கள் யோசித்து செயல்படும் எந்த காரியமும் நற்பலன்களைப் பெற்று தரும். பொது வாழ்வில் உங்கள் பங்கு சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் பல காலம் இழுபறியில் இருந்து வந்த பண பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
 
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நற்பலனைகளையும், எதிர்காலத்தை வளம் பெற செய்யும் வாய்ப்பினையும் தரும், கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பிறருக்கு பிணையமிடுவதை தவிர்க்கவும். பணியில் உங்களின் மேலதிகாரியில் தொந்தரவு குறைந்து, நன்மை உண்டாகும். எதிலும் நீங்கள் சந்தித்து வந்த சோதனை காலம்.. இனி சாதகமான சூழ்நிலையாக மாறும். 
 
தாயாரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் கடன் பிரச்சனை, வராத பணம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். தேவைக்கு பணம் வரும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
23-07-2024 செவ்வாய் பகல் 12.27 முதல் 25-07-2024 வியாழன் மாலை 03.05 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, தென் கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.