ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

சொல்லியதை செயலில் காட்டி, நன்மையைப் பெற்று தரும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்ப்பதும், குரு உங்களின் ராசியையும், பஞ்சமஸ்தானத்தையும் பார்வையிடுவதும்.. சகல காரியமும் நினைத்தபடி செயல்பட துவங்கும். காலத்திற்கு தகுந்தபடியும், சூழ்நிலைகளையும் அனுசரித்து உங்களின் செயல்பாடுகளை செயல்படுத்துவீர்கள்.
 
ஓன்லைன் வர்த்தத்தில் ஆர்வம் உண்டாகும். சொந்த முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். எந்த ஒரு கலையையும் தானே ஆராய்ச்சி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். கணணி துறையில் சிறந்த நிபுணத்துவமும், இந்த காலத்திற்குரிய விருப்பத்தையும் உணர்ந்து பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். ஆசிரியர் பயிற்சி கல்வி சிறப்பாக அமையும்.
 
வணிகம், கணக்கியல், பட்டய கணக்காளர்.. போன்ற தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு பொருளாதார நிபுணத்துவம் சம்மந்தமான பதவி கிடைத்து, அதில் சிறப்பாக செயல்படுவார்கள். முதலீடு இல்லாத சமூக பணி செயல்பாடுகள் மூலம் வருமானம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல கலைநயமான நடிப்பு திறனால்.. நிகழ்ச்சியில் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
 
புதிய தொழில் துவங்கும் சூழ்நிலை சிலருக்கு வரும். நிலம் சம்மந்தமான சில வழக்குகள் பல காலம் நிலுவையில் இருப்பவருக்கு விரைவில் தீர்வு உண்டாகும். ஜவுளி சம்மந்தமான வியாபாரம் செய்பவருக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். பித்தளை பாத்திர வியாபாரம் சிறப்பாக நடக்கும். வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். கடமையைச் செய்து அதற்கு தகுந்த பலனை பெற்று, வளம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
27-07-2024 சனி மாலை 05.26 முதல் 29-07-2024 திங்கள் இரவு 08.26 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென் மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ மாலை போட்டு நெய் தீபமேற்றி வணங்கி வர நினைத்த காரியம் தடையின்றி சிறப்பாக நடக்கும்.