ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கும்பம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - கும்பம்

புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரியத்தை செயல்படுத்தும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஜென்மத்தில் அமர்ந்தாலும், உங்களின் அன்றாட செயல்பாடுகளை திறன்பட செயல்பட திறமைகள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பீர்கள். நிலையான தொழில் செய்து வரும் உங்களின் தொழிலில் வளம் தடைப்பட்டாலும், நீங்கள் உங்களின் தனித்திறமையால் சரி செய்து கொள்வீர்கள்.
 
சில தடைகள் இம்மாதம் இருந்து வரும். எனினும் கடமையை செய்வதை தவிர்க்க மாட்டீர்கள். எதை பற்றியும் கவலைபடாமல் உங்களின் பணியை செய்து வருவீர்கள். அரசியலில் சரியான கோட்பாடு இருந்தாலும் உங்களின் உடன் இருந்தவர்கள்.. உங்களுக்கு துரோகம் செய்ததை நினைத்து வேதனைபடுவீர்கள்.
 
குரு உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது சற்று ஆறுதலை தருவதுடன் வருமானத்தில் நிறைவுகளை தருவார். உங்களின் முயற்சி பழுதின்றி நடக்கும். கலைத்துறையினருக்கு காலத்தை கடந்து, இனி நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் அறிமுக செய்த நபரே உங்களுக்கு எதிராக செயல்படுவதைக் காண்பீர்கள். உலக நியதிகளின் படி எல்லாம் சிறப்பாக அமையும்.
 
அரசியலிலும், பொது வாழ்விலும் சிறப்பாக செயல்பட்டு உங்களின் மதிப்பை தக்க வைத்து கொள்வீர்கள். இனி வருங்காலத்தில் எதை செய்ய வேண்டாமென்று தீர்மானித்தீர்களோ.. அதை சரி செய்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு தடையின்றி கல்வி அமையும். முக்கிய பிரச்சனைகளை கையாளும் போது.. அதற்கு தகுந்த படி உங்களின் செயல்பாடுகளையும் அனுசரித்து மாற்றிக் கொள்வீர்கள். 
 
விவசாயத்தில் செலவு செய்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். வெளியூர் சென்று வருவீர்கள். வெளிநாடு சென்று வர சிலருக்கு முயற்சிகளில் தடை உண்டாகும். குடும்ப ஒற்றுமையும், பொருளாதாரமும் சீராக கொண்டு செல்ல பாடுபடுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
11-07-2024 வியாழன் இரவு 08.24 முதல் 14-07-2024 ஞாயிறு காலை 08.05 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, தென் கிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
சனி, ஞாயிறு, செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்தும் செவ்வாய்கிழமை சுப்ரமணியர் வழிபாடும் செய்து வர, உங்களின் அன்றாட பிரச்சனைகளால் தடை ஏற்படாமல், சிறப்பான வெற்றியை தரும்.