ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

பிறருக்கு உதவி செய்வதை கொள்கையாக கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்தும், லாபஸ்தானத்தை பார்ப்பதும், குரு உங்களின் ராசியை பார்ப்பதும் உங்களின் மன வலிமை சிறப்பாக அமையும். எந்த காரியமும் விரைவில் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். அரசியலில்உங்களின் செல்வாக்கு உயரும்.
 
சனி ஆட்சி பெற்று தனஸ்தானத்தில் அமர்வதன் மூலம் உங்களுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். உங்களின் தனி திறமைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுப்பார்கள். எதிலும் உங்களுக்கு வெற்றி தான். நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழிற்சங்க பொறுப்பு வகிப்பவர்கள் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வார்கள்.
 
சுகஸ்தானத்தில் உங்களின் சுகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று சந்திரனுடன் சம்மந்தப்படுவதால் ரியல் எஸ்டேட், வீட்டு மனை விற்பனை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். சோதனை காலம் முடிந்து இனி சாதகமான காலமாக அமையும். உறுதியான நிலைபாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, நற்செயல்களை செய்து வருவீர்கள்.
 
முக்கிய காரியங்களை கையாளும் போது நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் செய்து வருபவருக்கு வேண்டிய வசதிகள் கிடைக்கும். கடல் கடந்து வேலையில் இருப்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் சொந்த ஊருக்கு வந்து, உறவுகளிடம் அன்பை பரிமாறிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் அமையும்.
 
கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக அமையும். உங்களின் ஒவ்வொரு செயலும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல்படுவதால், திறமையுடன் செயல்படுவீர்கள். உரிய நேரத்தில் அனைத்தையும் செய்து முடிக்கும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஏற்பட்டு, நலமுடன் இருப்பீர்கள். உங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வருமானம் இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
09-07-2024 செவ்வாய் காலை 09.10 முதல் 11-07-2024 வியாழன் இரவு 08.23 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
சனி, புதன், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமேற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள எதிரி தொல்லை நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள்.