ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

மற்றவர்களிடம் இரக்ககுணம் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு, முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பார்க்குமிடத்தால் சிறப்பான பலனை பெற்றுத் தரும். தன ஸ்தானாதிபதியும், பஞ்சமாதிபதியும் தனஸ்தானத்தில் இணைந்திருப்பது.. பொருளாதார மேன்மையைப் பெற்று தரும். விரய சனியின் காலம் என்பதால்.. தேவையற்ற செலவுகள் உண்டாகும்.
 
தொழில் செய்யுமிடத்தில் உங்களின் உற்ற நண்பரால் செலவு செய்து பண விரையம் ஆகும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. ஆன்மீக தேடல் இருப்பவர்களுக்கு உற்ற குரு சந்திப்பு உண்டாகும். அதன் மூலம் புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வீர்கள். கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு உங்களின் வளர்ச்சி தேவையானவற்றை உருவாக்கி கொள்வீர்கள்.
 
வெளியூர் பயணம் செய்ய வேண்டி வரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையும், இடமாற்றமும் உண்டாகும். கலைத்துறையினருக்கும், இசை கலைஞர்களுக்கும், நாட்டிய கலைஞர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறுகிய கால தொழிலில் பணப்பலன்களைப் பெறலாம். எதிலும் அதிகமான முதலீடு செய்வதை தவிர்த்து, சிறிய அளவில் முதலீடுகளை செய்து வாருங்கள். 
யாரையும் நம்பாமல் அவர்களை கண்காணித்து உங்களின் செயல்களை உறுதி செய்யுங்கள். 
 
அரசியலிலும், பொது வாழ்விலும் எப்பொழுதும் உங்களுக்கு ஈடுபாடு குறைவாக இருக்கும். குடும்ப சூழ்நிலையில் சிலருக்கு தேவையற்ற வாக்குவாதம் வரும் என்பதால், சற்று மௌனமாக இருப்பது நல்லது. நல்ல காரியத்தை செய்வீர்கள். தர்ம காரியத்தில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
14-07-2024 ஞாயிறு காலை 08.06 முதல் 16-07-2024 செவ்வாய் மாலை 06.34 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து, ‘ஸ்ரீ ராமஜெயம்’ எழுதி வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554