ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

வாழ்க்கையை சூழ்நிலை தகுந்தபடி அமைத்து கொள்ளும் மேச ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரனுடன் ராசியில் ஆட்சி பெறுவதும், தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவுஸ்தானங்களை பார்வை இடுவதும், சனியின் பார்வை ராசியில் அமைவதும், உங்களின் அனைத்து காரியங்களும் திறம்பட செய்து பாராட்டைப் பெறுவீர்கள். விளையாட்டுத்துறை சார்ந்த வெளியூர் பயணம் சிலருக்கு அமையும்.
 
தாயார் வழி சொந்த உறவுகளில் இருந்து வந்த விரிசல்கள் மறையும். குடும்ப ஒற்றுமை ஏற்பட சிலர் முயற்சி செய்து நன்மை பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் திறம்பட செயல்படுவீர்கள். அரசியலில் முன்பிருந்த செல்வாக்கைத் தக்க வைத்து கொள்வீர்கள். உங்களின் சொந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
 
உடல் ரீதியான சின்ன தொந்தரவுகள் உண்டாகும். எதற்கு அஞ்சாமல் உங்களின் கடமையை செய்வீர்கள். பொது விடயங்களில் உங்களுக்கு எது நியாயமானதாகப் படுகிறதோ...அதனை விட்டு பின் வாங்காமல் கடைசி வரை அதற்காகப் போராடுவீர்கள். உங்களின் மன வலிமை தான் உங்களுக்கு எப்பொழுதும் பலமாக அமையும்.
 
கலைத்துறையினருக்கு திடீர் வாய்ப்புகள் அமையும். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமையும். கணவன் -மனைவி ஒற்றுமை நிலவும். மனவிட்டு பேசி சமாதானம் கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு கட்ட, மனை வாங்க சிலருக்கு சந்தர்ப்பம் அமையும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
16-07-2024 செவ்வாய் மாலை 06.35 முதல் 18-07-2024 வியாழன் இரவு 02.51 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழன் காலை 06 - 07 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து கடலை மிட்டாய் வைத்து, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வர நீங்கள் நினைத்த சகல காரியமும் வெற்றியை தரும்.