ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - ரிஷபம்

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய துடிக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு பார்வைபடும் இடங்கள் சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். உங்களின் ராசிநாதன் தனஸ்தானத்தில் சுகஸ்தானதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அமர்வது காரியத்தில் திறம்பட செயல்பட்டு நன்மை அடைவீர்கள். லாபஸ்தானத்தில் ராகு அமர்ந்து ராசியை பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் பலன் கிடைக்கும்.
 
சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பும், வெளிநாட்டு தொழில் முதலீடுகளிலும் ஆர்வம் உண்டாகும். ஓன்லைன் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்வீர்கள். எதையும் யோசிக்காமல் செய்து விட்டு, பின்பு யோசித்து செயல்படுவீர்கள். உரிய நேரத்தில் செய்திடாமல் தாமதமானதால்.. சிலருக்கு பதற்றமான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையில் வளம் பெறுவீர்கள். 
 
உங்களின் சகல முயற்சிகளுக்கு பக்க பலமாக உதவிகள் கிட்டும். உங்களைப் பற்றி மட்டும் சிந்தித்து செயல்படுவீர்கள். பொது விடயங்களில் உண்மையான விடயங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவீர்கள். உயர் கல்வி கற்க சிலருக்கு வெளியூர்  மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அமையும். குறுகிய கால முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். 
 
விவசாய இடுப் பொருட்கள் விலை ஏற்றம் உண்டாவதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வெள்ளி, தங்க நகை வியாபாரம் ஆதாயம் தரும். மளிகை பொருள் விற்பனை நல்ல லாபத்தை பெற்று தரும். ஆண் ஆதிக்கம் உள்ள பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனைவியுடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
18-07-2024 வியாழன் இரவு 02.52 முதல் 21-07-2024 ஞாயிறு காலை 08.37 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து இலுப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நினைத்தபடி சிறப்பாக நடக்கும்.