ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

மனத்தில் பட்டதை உடனே செய்து விட எண்ணும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் ராசிநாதன் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்து பஞ்சம ஸ்தானத்தை பார்வை இடுவதும். யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும், எடுத்த காரியத்தை முடிக்கும் வரை உங்களின் முயற்சிகளை விடாமல் செய்து வருவீர்கள். கடந்த காலத்தில் இருந்து வந்த தொய்வு நிலைமாறி.. விரைவாக செயல்பட்டு நலம் பெறுவீர்கள்.
 
உங்களின் உடல்நலனில் அடிக்கடி கவனம் செலுத்த வேண்டி வரும். பொது விடயத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டு செயல்படுவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் மீண்டும் உயரும். உங்களின் நண்பர் போல பேசி இதுவரை உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
 
உங்களை நம்பி வந்தவர்களுக்கு நன்மையை செய்ய வேண்டுமென்று நினைத்து செயல்படுவீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் இறுதி வரை போராடி வெற்றி காண்பீர்கள். நிலையான உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் அடிக்கடி சென்று வரும் சூழ்நிலை உருவாகும். சுற்றாத்தார்களின் அரவணைப்பு நீடிக்கும்.
 
கணவன்- மனைவி உறவில் சச்சரவு இருந்தாலும்.. நல்ல சற்று இணக்கமான சூழ்நிலையும் நிலைக்கும். பாதியில் விட்டு போன சில காரியம் மீண்டும் தொடரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு வாகனத்தை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உங்களின் கைபேசியை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். சகோதரரின் உதவி கிட்டும். பொருளாதார நிலையில் சற்று மேன்மை தென்படும். தொழிலில் நல்ல வளரச்சியை பெற்று வருமானம் கூடும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
25-07-2024 வியாழக்கிழமை மாலை 03.06 முதல் 27-07-2024 சனி மாலை 05.27 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, வெண்மை, ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தென் கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி உளுந்து வடை நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக அமையும்.