ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - துலாம்

இன்னல்கள் வந்தாலும் அதை பற்றி நினைக்காமல் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானதிபதி, தனஸ்தானாதிபதி பார்வைபடுவதும், ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் லாபாதிபதியுடன் சேர்ந்து இருப்பதும், நீஙகள் மென்மேலும் வளர்ந்து வர சகல வாய்ப்புகளும் அமையும். தொழிலில் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். பணியில் உங்களுக்கு இருந்த கஷ்டமான சூழ்நிலைகள் மாறி, இலகுவான சூழ்நிலை உண்டாகும். அதிக அலைச்சல் குறையும். 
 
வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் கல்வியில் அதிக பெறுபேறு பெற்று, உயர்கல்வியை விருப்பத்திற்குகேற்ப தெரிவு செய்வார்கள். பொது நல கருத்துகளை ஆதரித்து, அதற்கேற்ப செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளிடம்  காலம் அறிந்து பேசி காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவீர்கள். பிறருக்கு எதையும் விட்டு கொடுத்து, பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். நல்ல மனிதர்களின் தொடர்புகளால் உங்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம் உண்டாகும்.
 
தொலைதூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். முதலீடுகளை செய்யும் முன்பு அதன் நிலை பற்றி அறிந்து முதலீடு செய்வது நன்மை தரும். கலைத்துறையினருக்கு சில காலம் சரியில்லாமல் இருந்த நிலை மாறி, வளம் பெறும் காலமாக அமையும். சிறந்த எழுத்தாளர்களாக மிளிர்வதற்கான திறமை உண்டாகும். கற்பனை வளம் நன்றாக இருக்கும். 
 
எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று இல்லாமல், தெளிவாக செய்து முடிப்பீர்கள். உறவுகளில் இருந்த விரிசல்.. படிப்படியாக சரியாகி நன்மை உண்டாகும். தொழிலில் முதலீடுகளை அதிகபடுத்த வேண்டி வரும். பேசியே எல்லோரின் மனதிலும் இடம்பிடித்து விடுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
02-07-2024 செவ்வாய் பகல் 12.16 முதல் 04-07-2024 வியாழன் மாலை 04.55 மணி வரையும்.
29-07-2024 திங்கள் இரவு 08.27 முதல் 30-07-2024 புதன் இரவு 12.52 மணி வரையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வாழைபழம் நைவேத்தியம் வைத்து வணங்கி வேண்டிக் கொள்ள சகல காரியமும் வளம் பெறும்.