ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

ஜூலை மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்

துணிச்சலும், மன வலி்மையும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் கேது லாப ஸ்தானத்திலும், லாபாதிபதி பாக்கியஸ்தானத்தில் அமர்வது உங்களின் பொருளாதார மேன்மையைப் பெற்றுத் தரும். தொழிற்சங்கப் பணிகளைச் சிறப்பாக செய்து வருவீர்கள். தொழிலாளர்களில் நன்மையை கருதி சிறப்பாக செயல்படுவதுடன், அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் சரிசெய்து தருவீர்கள். 
 
ஆன்மீக பயணம் சிறப்பாக அமையும். விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அடிக்கடி வெளியூர் பயணம் செய்ய வேண்டிவரும். உணவு சம்மந்தமான சிக்கல்கள் வரும். தனி திறமையுடன் செயல்படுவதை விரும்புவீர்கள். விளையாட்டு துறையில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். 
 
நட்புக்கு முன்னுரிமைக் கொடுப்பதுடன், கடமையை செய்து பலனை எதிர்பாராமல் பலருக்கும் உதவிகளை செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகி மறையும். தொழில் செய்து வருபவருக்கு வியாபாரம் குறைவாகவே இருந்தாலும் வருமானத்தில் குறை வராது. சகோதரர்களின் பகை நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து நடப்பீர்கள்.
 
உங்களின் எண்ணத்திற்கு தகுந்தபடி எல்லா வளமும் கிடைக்கும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது மோகம் உண்டாகும். அதை வாங்க கடன்பட வேண்டிவரும். வேலை கிடைக்க முயற்சி செய்தால்.. விரைவில் நல்ல வேலை அமையும். கலைத்துறையினருக்கு வெளியூர் சென்று நிகழ்ச்சி செய்யும் சூழ்நிலை உருவாகும். தொழிலிலும், உத்தியோகத்திலும் உங்களின் செயல் சிறப்பாக அமையும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
04-07-2024 வியாழன் மாலை 04.56 முதல் 06-07-2024 சனி இரவு 11.46 மணி வரையும்.
30-07-2024 புதன் இரவு 12.53 முதல் 03-08-2024 சனி காலை 07.28 மணி வரையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஓரஞ்சு, மஞ்சள், பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், புதன், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை காலை 09.00 - 10.30 மணிக்குள் அதாவது ராகு காலத்தில் வைரவருக்கு நான்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வேண்டிக் கொள்ள காரிய தடை நீங்கி, சுபிட்சம் உண்டாகும்.