ஆரம்கொண்ட பெருமாள்!

ஆரம்கொண்ட பெருமாள்!

சிவபக்தி மிக்க சோழ மன்னர் ஒருவர் சிவராத்திரிப் புண்ணியத் திருநாளன்று சிவநாமம் ஓதி சிவ நினைவுடன் காவிரியில் புனித நீராடிக் கொண்டிருந்தார். எப்போதும் கழுத்தில் சிவலிங்கம் அணிந்து கொண்டிருந்த அந்தச் சோழ மன்னர் நீராடும் போது சிவலிங்கப் பதக்கம் அணியப் பெற்றிருந்த அவருடைய மாணிக்க மாலை கழன்று நதியில் விழுந்தது. கழுத்திலிருந்து லிங்கப் பதக்க மாலை நீரில் விழுந்துவிட்டதைக் கண்ட மன்னர் பதனறினார். ஜம்பு லிங்கத்தைத் தொழுது  மாணிக்க மாலையப் தாமே ஏற்றுக் கொண்டு அருளுமாறு உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கித் தொழுது வேண்டினார்.
 
கங்கை ஆடில் ஏன்? காவிரி ஆடில் ஏன்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் ஏன்
ஒங்கு மா கடல் ஓத நீராடில் ஏன்
நான்காவது வல இங்கே சேர்ந்து வர வேண்டும்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே (அப்பர்)
 
என உள்ளத்தில் சில நினைவு இல்லாமல் வேறொன்றில் சிந்தனையை வைத்துப் புனிதத் தீர்த்தங்களில் நீராடினால் அந்தப் புண்ணியச் செயல்களால் எந்த விதமான பலனும் இல்லை. எந்தச் செயலைச் செய்தாலும் சிந்தை வேறு எங்கும் சிதறாமல் ஈசன் திருவடியில் மனதை நிறுத்திப் பரமனை நினைத்துச் செய்தால் எண்ணிய எண்ணமெல்லாம் உடனே ஈடேறுகின்றது. நீராடும் போது தண்ணீர்ப் பெருமாளின் திருநாமம் ஓதி நீராட வேண்டும் என்று மாணிக்க வாசகப் பெருமாள் திவெம்பாவைப் பதிகத்தில் பாடி வழிகாட்டியதற்கு ஏற்ப கங்காதனை நினைந்து வெள்ளச் சடையனைப் போற்றி நதி நாயகத்தை தொழுது ஜலகண்டேஸ்வரனைத் துதித்து நீராடிய சோழ மன்னர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி  மெய்யன்புடன் உருகித் தொழுது மாலையைக் காத்தருளுமாறு கயிலைநாதனை வேண்டினார்.
 
உள்ளம் உருகி வேண்டும் அன்பர்கள் விரும்புவதை உடனே நிறைவேற்றி அருள்கின்ற விஸ்வேஸ்வரன் சோழ மன்னருக்கு அருள் புரிந்தார். செழு நீர்த் திரளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது அபிஷேகக் குடத்திலிருந்து தண்ணீருடன் மாணிக்க மாலையு்ம் லிங்கப் பரம்பொருளின் மேல் விழுந்து அணிகலனாயிற்று. நீராடி முடிந்து நெற்றியெல்லாம் திருநீரால் நாவில் சிவநாமமாய் நெஞ்சில் சிவவடிவாய்க் கோயிலுக்கு வந்த மன்னர் ஓங்காரப் பொருளின் மீது மணி மாலையைக் கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தார். பக்தர்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றும் கருணைக் கடலின் அருளுக்கு மனம் நெகிழ்ந்து போற்றினார். மாலையை அணிந்து கொண்டதால் ஜம்புகேஸ்வரருக்கு ஆரம் கொண்ட பெருமாள்என்ற திருநாமம் உண்டாயிற்று.
 
தாரமாகிய பொன்னித் தன் துறை ஆடி விழுந்து
நீரில் நின்று அடிபோற்றி நின்மலா கொள் என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடைபவரே (சுந்தரர்)

செஞ்சடை ஆர நலோடு ஏந்தினான்
ஆரம் ஆய மண் உடை ஆனைக்காவில் அண்ணலை (சம்பந்தர்)
 
மணி ஆர மார்பினாலன
 
என்று தேவாரத் திருமுறைகள் போற்றுகின்றன. ஈசனுக்கு ஆரம்விட்ட இந்தச் சோழனின் பக்தியை ஆரம் விட்டான் கோபுரம் என்ற கோபுரத்தின் பெயரும் காட்டுகின்றது. திருவாளைக்காத் திருக்கோயிலில் ஆரம் விட்டான் கோபுரம் போன்று ராய கோபுரம், மல்லப்ப கட்ட கோபுரம், கார்த்திகைக் கோபுரம், மணிமண்டபக் கோபுரம், சங்கரேஸ்வரர் கோபுரம், சுந்தர பாண்டியன் கோபுரம் என்று எல்லாக் கோபுரங்களும் பெயர் கொண்டுள்ளன. நாலு கால் மண்டபம்  நூறு கால் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மீனாட்சி மண்டபம், கன்றுக்குட்டி மண்டபம், நாற்கூடல் முக மண்டபம், மகர மண்டபம், சபா மண்டபம், குறத்தி மண்டபம், வசந்த மண்டபம், பந்தல் மண்டபம், ஐயர் மண்டபம் அல்லது உற்சவர் மண்டபம் என்று மண்டபங்களும் பெயர்களுடன் விளங்குகின்றன. 
 
பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், பராசரன் குளம், இராம தீர்த்தம், சீர் மெய் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களோடு காவிரி நதியும் சேர்ந்து ஒன்பது தீர்த்தங்களைக் கொண்டு திருவானைக்காவின் தீர்த்த நாயகர் விளங்குகின்றார். காவிரி நதி திருவானைக்காவின் புனிதத் தீர்த்தமாக இருப்பதை 
 
புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு திருவானைக்காவில்
உகறை தேனே
 
என்று திருநாவுக்கரசர் தேவாரம் போற்றுகின்றது.
 
- சிவப்பிரியா