ரெய்கி பாகம் - 7

ரெய்கி பாகம் - 7

ரெய்கி சக்தியின் அற்புதமும் கிறிஸ்டல் சக்திகளின் அற்புதமும்

உலகில் பிறந்த மக்கள் அனைவரும் விரும்புவது வெற்றியையே. மேலும், தாங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுவதும் மனித இயல்பே. ஆனால் அனைத்து மக்களும் வெற்றி பெறுகிறார்களா என்று பார்க்கும்போது இல்லை என்றே பதில் வருகிறது. அதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள்.

அதன்படி,

1. காந்த சக்தி (மனவுறுதி படைத்தவர்கள்) 2. காந்த சக்தி (மனவுறுதி இல்லாத மனிதர்கள்)

இந்த இரண்டு வகையான மனிதர்களில் காந்த சக்தி படைத்தவர்கள், அவர்கள் எடுக்கும் காரியங்களில் நூறு சதவீதம் உறுதியான வெற்றியை அடைவார்கள். காந்த சக்தி இல்லாதவர்கள் இருந்தாலும் இயற்கையுடன் இணைந்து அதாவது, இயற்கைச் சக்திகளான பஞ்சபூத சக்திகளோடு இணைந்து பூமிக்கடியில் கிடைக்கும் கிறிஸ்டல்களின் சக்திகளை உபயோகித்து மிகப்பெரிய வெற்றியை அடையலாம்.

மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் கிறிஸ்டல்கள் மூலமாக கண்டிப்பாகத் தீர்வு உண்டு. கிறிஸ்டலைத் தேர்ந்தெடுத்து பிரச்சனைகளை நீக்கிக்கொள்ளலாம். கிறிஸ்டல்களில் மாபெரும் சக்தி இருக்கிறது. அதற்கு இருதயத் துடிப்பு உள்ளது. அதில் மின் காந்த அதிகப்படுத்தி வெளிவிடும் சக்தி உடையது. மக்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை, நோய்களை, கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். மனநிலையையும் நோய்களையும் குணப்படுத்த, இந்தக் கிறிஸ்டல்கள் பெரிதும் உதவுகின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு வஸ்துவும் அசைந்துகொண்டே இருக்கிறது. மேலும் அதில் அணுத் தன்மை இருக்கிறது. கிறிஸ்டல் கற்களிலும் மின் காந்த சக்தியானது சுற்றிலும் பரவிக்கொண்டே இருக்கின்றன. முப்பட்டை கண்ணாடி வழியாகப் பார்த்தால், நம்முடைய உடலைச் சுற்றிலும் வண்ண ஒளியைப் பார்க்கலாம். அவரவர் குறைபாட்டுக்குத் தேவையான கிறிஸ்டல்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சரீரத்தில் பரவ விட்டால், நமது சரீரத்தில் ஏற்பட்டுள்ள சக்தி இழப்புகள் நீங்கி, அதிக சக்தி பெற்று, உற்சாகமாகச் செயற்படும்போது நோய்கள் நீங்கிவிடும். எண்ணங்களும் சீர்பெற்று நம் இலட்சியத்தை அடையலாம்.

இனி கிறிஸ்டல்களின் பலன்கள் பற்றிப் பார்க்கலாம்.

Aqua Marine (மெல்லிய நீல நிறக் கல்)

தொண்டைச் சக்கரத்துக்குப் பயன்படுத்தலாம். இதன் முக்கிய அம்சம், உடலில் ஜீவ சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு விசுத்தி சக்கரத்தில் வைக்கும்போது, அதன் ஒலிக்கதிர்கள், அந்தச் சக்கரம் மூலமாக உட்பகுதிகளுக்குப் பரவி, மிக மோசமான, பலவீனமானவர்களுக்கு நல்வாழ்க்கை அமைய உதவி புரிகின்றது. இக்கல்லானது, உள்ளுணர்வால் வேலைசெய்து, நமக்குப் புரியாத வாழ்க்கை ரகசியங்களைப் புரியவைக்கிறது. கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. கண் எரிச்சலைப் போக்குகிறது. கண் வீக்கத்திற்கு மேல் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. மனிதன் இறக்கும் சமயத்தில் உள்ளவர்களுக்கு தொண்டைப் பகுதியில் இக்கல்லை வைத்தால், சிரமங்கள் இல்லாமல் ஆத்மா பிரியும். `உயிர்களை வாழவைக்கும் ஜீவன்' என்று ரோமானியர்கள் இக்கல்லைப் போற்றியுள்ளனர். மீன ராசிக்காரர்கள் இதை அணிந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும். 

Lapiz Lzauli

முதல் இரண்டு சக்கரங்களுக்கும் பயன்படுத்தலாம். கோபம், உணர்ச்சிவசப்படுதல் என்பவற்றைத் தவிர்த்து, மனதில் அமைதி, நம்பிக்கையைத் தருகிறது. நல்ல குணங்களை வளர்த்து ஆன்மீக சக்திகளை அதிகரிக்கிறது. உயர்நிலை தியானத்தை அடையலாம். வலிப்பு, மூளைக்கோளாறு, வாந்தி, நரம்புத் தளர்ச்சி முதலியவற்றுக்கு உதவும். ரிஷப, விருச்சிக ராசிக்காரர்கள் அணியலாம்.

Amber

மூலாதாரச் சக்கரத்தை உறுதிப்படுத்தும். ஆஸ்த்மா, இருமல், தொண்டைக் கோளாறுகள் மற்றும் பல்வலி என்பவற்றை குணப்படுத்தும். சினிமாக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், அமிதிஸ்ட் மற்றும் ஆம்பர் அணிந்தால், நல்ல பேரும் புகழும் செல்வாக்கான சூழ்நிலையையும் அடையலாம். 

பெரிடாட் Garnet

ஆண்களும் பெண்களும் பொதுவாக மோதிரத்தில் அணியலாம். ஐஸ்வர்யம் பெருகும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். பணவிருத்தி உண்டாகும்.

Jade Blood Stone

ஜேட் கல்லை, வியாபாரிகள் தம் பணப்பெட்டியில் போடலாம். பிரமிடுகளாக வீட்டில் வைக்கலாம். ஜேட் கல்லால் ஆக்கப்பட்ட மரம் வைக்கலாம்.

ரோஸ் குவார்ட்ஸ்

அன்பு அதிகரிக்கக்கூடியது. வீட்டினுள் அல்லது இதை எங்கு வைத்தாலும் அங்கு தீய சக்திகள் விரட்டப்பட்டு நல்ல சக்திகள் மேம்படும். வீடு கட்டும்போது, பூமிக்கடியில் போட்டுக் கட்டலாம். கணவன்-மனைவி பிரச்சனைக்குப் பயன்படுத்தலாம். தென்மேற்கு மூலையில் பிரமிட் வைக்கலாம். இளைப்பு, ஆஸ்த்மா போன்ற நோய்களைத் தீர்க்கவும் இது உதவும்.

அமிதிஸ்ட்

ஞாபக சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, கோபம், தலைவலி, திக்குதல் இவற்றுக்கு நல்ல பெறுபேற்றைக் கொடுக்கும். தேர்வு எழுதும் மாணவர்கள் அமிதிஸ்ட் டொலர் அணிந்துகொண்டால், படபடப்புக் குறைந்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அறிவுத் திறனை வளர்க்கும். பயத்தைப் போக்கும். தீயசக்தியை விரட்டும் சக்தி கொண்டது.

அவரவர் பிரச்சனைக்குத் தகுந்த கிறிஸ்டல்களைத் தேர்வுசெய்து உபயோகப்படுத்தி, வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழலாம்.