புத்திசாலிக்குதிரை

புத்திசாலிக்குதிரை

நேரம் - காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை, உரிய திசை -தெற்கு, உரிய காலங்கள் - கோடை காலம் / ஜுன் மாதம், நிலையான மூலகம் - நெருப்பு, யின்/யாங் - யாங், 

http://perso.wanadoo.es/grupocefire/Envios/vicky/super-horse.jpg1904, 1918, 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026, 2038, 2050 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தைய தொடர்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.  இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜனவரி 25, 1906 - பிப்ரவரி 12, 1907
பிப்ரவரி 11, 1918 - ஜனவரி 31, 1919
ஜனவரி 30, 1930 - பிப்ரவரி 16, 1931
பிப்ரவரி 15, 1942 - பிப்ரவரி 04, 1943
பிப்ரவரி 03, 1954 - ஜனவரி 23, 1955
ஜனவரி 21, 1966 - பிப்ரவரி 08,1967
பிப்ரவரி 07, 1978 - ஜனவரி 27, 1979
ஜனவரி 27, 1990 - பிப்ரவரி 14, 1991
பிப்ரவரி 12, 2002 - ஜனவரி 31,2003
ஜனவரி 31, 2014 - பிப்ரவரி 18,2015

இனி இந்தத்  தொடரில் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசங்களைப் பற்றிப் பார்ப்போம்.  குதிரைவாசிகள் உற்சாகம் மிகக் கொண்டவர்கள்.  எல்லோராலும் விரும்பப்படுவார்கள்.  பிடிவாதக்காரர்கள்.  சமயங்களில் எரிச்சலூட்டினாலும், பழகுவதற்கு உகந்தவர்கள்.

உண்மை, தோழமை, திறந்த மனம் போன்ற குணங்களைப் பெற்றவர்கள்.  சுதந்திரமாக, நடுவு நிலைமை கொண்டவராக, திறமைகள் பலவும் கொண்டவராக, சூழலுக்க ஏப்ட தன்னை பொருத்திக்கொள்பவராக, எப்போதும் துறுதுறுப்புடன் உயிர்ப்புடன் இருப்பவர்கள்.  உணர்வுபூர்வமானவர்கள்.  மனிதர்களையும், சூழலையும் சரியா எடை போட வல்லவர்கள்.  தங்களுக்குப் பிடித்ததை தன் வழியிலேயே செய்யும் சுதந்திரத்தை விரும்புபவர்கள்.  வேகமாக முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள்.  மறதி, சமயங்களில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.  இருந்தாலும் செய்வதைச் செய்து முடிக்க முயல்வர்.  நம்பகமானவர்கள்.  பொறாமை குணம் அற்றவர்கள்.

நேரத்தை வீணாக்குபவர்கள். அட்டவணைப்படி நடக்க விரும்பாதவர்கள்.  நண்பர்கள் குழுவில் பலர் இருந்தாலும் தான் செய்ய வேண்டிய வேலையைத் தான் விரும்பிய வழியில் செய்ய எண்ணம் கொண்டு செயல்படுவர். பலம், வேகம், பழக குணங்களைக் கொண்டவர்கள்.  முக்கிய நபராக எண்ணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர்.  சந்தோசமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள் என்பதால் கூட்டங்களில் தங்களது நகைச்சுவை மூலம் கூடியுள்ளவர்களை சந்தோசப்படுத்துவர்.

குதிரைவாசிகள் சிறந்த புத்திசாலிகள்.  புதிய விசயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்ள வல்லவர்கள்.  பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய சக்தி படைத்தவர்கள்.  ஆனால் தொடங்கிய பல வேலைகளை முடிக்க மாட்டார்கள்.  ஏனென்றால் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே வேலை செய்கின்ற காரணத்தினால், இருக்கும் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, அடுத்த வேலைக்குத் தாவி விடுவார்கள்.  அவர்கள் தங்களைப் பற்றியே அதிகம் எண்ணிக்கொண்டே இருக்கும் காரணமாக, ஏதாவது தான் விரும்பியபடி நடக்கவில்லையென்றால், அதற்காகக் கோபப்பட்டு பக்கத்தில் உள்ளவர்களை சாடுவார்கள்.

அனைவரையும் கவரத்தக்கவர்கள்.  அவர்கள் தோழமை குணம் அதிகம் கொண்டவர்களாதலால், நிறைய மனிதர்கள் கூடியிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.  அவர்கள் பேசுவதில் சுகம் காண்பார்கள்.  அவர்கள் உற்சாகம் மிகக் கொண்டு, மாறுதல்களை வரவேற்பார்கள்.  அவர்கள் அதிகக் கோபம், அகந்ததை,மூர்க்கத்தனம் கொண்டவர்களாகவும், சில நேரங்களில் இருப்பார்கள்.  நேசிக்கும் அதே வேகத்தில் வெறுக்கவும் செய்வார்கள்.  வேகமாக நண்பர்களாவார்கள்.  அதே வேகத்தில் பழகுவதில் ஆர்வமற்றும் இருப்பார்கள்.

இன்று வாழ். நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற கொள்கை உடையவர்கள். துணிச்சல் மிக்கவர்கள்.  கூர்மையான அறிவு கொண்டவர்களாதலால் பண விசயங்களை திறம்படக் கையாளக் கூடியவர்கள்.  சுயமாக எதையும் செய்ய வல்லவர்கள்.  உற்சாகப் பேர்வழிகள்.  உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் விருப்பமானவை.  வேகமாக ஓடக் கூடியவர்கள்.  வேகமாகப் பேசினாலும் நளினமாகப் பேசுவர்.  தான் விரும்பிய வழியில் எதும் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவர்.  அப்படி நடக்கவில்லையென்றால் ஆவேசப்படுவர்.  எதைவிடவும் தங்கள் சுதந்திரத்தை விரும்புவர்.  யாரையும் பேராசைக் கண்ணோடு பார்க்க மாட்டார்கள்.  எதையும் உடைமை கொண்டாட மாட்டார்கள்.  மிகவும் அமைதியாக இருப்பர்.  உள்ளுணர்வைச் சார்ந்திருப்பர்.

குதிரைவாசிகள் புதிய புதிய எண்ணங்கள் கொண்டவர்கள்.  கடினமாக பிரச்சினைகளுக்கும் புதிய வழியில் தீர்வு காண்பர்.  ஒரு கருத்துத் தோன்றியதுமே, அதைச் செய்து முடிக்கத் துடிப்பர்.  வேலையை முடிக்கும் வரை நேரம் காலம் பார்க்க மாட்டார்கள்.  நேரமின்மை காரணமாக எந்த முடிவையும் விரைவில் எடுக்கத் துடிப்பர்.  தவறான முடிவாக இருந்தாலும் சரி, நேரத்தை வீணடிக்காமல் முடிவு எடுத்தால் சரி.

குதிரைவாசிகளுக்கு அவர்களது உணர்வுகளைக் காட்ட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.  பொறுமையற்றவர்கள்.  கோபம் மிகக் கொள்வார்கள்.  அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள்.  அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட முயல வேண்டும்.  குதிரைவாசி வீட்டில் இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரது கவனமும் அவர்களிடம் இருக்கும்படி நடந்து கொள்வார்கள்.  அவர்கள் எப்போதும் நடுநாயகமாக இருந்து, எல்லாம் அவர்களைச் சுற்றி நடக்க வேண்டும் என்று எண்ணும் இயல்பினர்.  அதற்கு பரிசாக, உழைத்து எல்லோருடனும் அதைப் பகிர்ந்துகொள்வர்.

தொழில்
கவிஞர். பயணக்கட்டுரையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, துணிகரச் செயல்கள் செய்பவர், பத்திரிக்கையாளர், மொழி பெயர்ப்பாளர், மொழி கற்பிப்பவர், சுற்றுலா உதவியாளர், நூலகர், விமான ஓட்டுநர், விற்பனையாளர், விளம்பரப் பணியாளர் பணிகள் உகந்தவை.

பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறம் படைத்தவர்கள்.  செயல்கள் நடந்து கொண்டு இருக்கும்போதே அதைத்தன் வழியே செய்ய வல்லவர்கள்.  நேரம் காலம் பாராமல் உழைக்கக்கூடியவர்கள்.  அவர்கள் பெரிதும் களைப்படையும் போது மட்டுமே வேலைச் செய்வதை நிறுத்துவார்கள்.  அவர்களுக்கு அன்றாடம் செய்யும் வேலை அட்டவணை என்பதெல்லாம் பிடிக்காத ஒன்று.  நேரப்படி காரியம் செய்ய விரும்பாதவர்கள்.  எப்போதும் தங்களை ஏதோவொரு செயலில் ஈடுபடுத்திய வண்ணம் இருப்பர்.

பலருடன் இணைந்து செய்யும் வேலைகளை விரும்பிச் செய்வர். ஆணைகளுக்கு அடி பணிவது அவர்களுக்கு பிடிக்காத விசயம்.  தினமும் ஒரே மாதிரியாக செய்யும்வேலைகளைக் கண்டு ஓடுவர்.  புதிய புதிய விசயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சமார்த்தியம் இருப்பதன் காரணமாக, அவர்கள் எல்லா வேலைகளையும் திறம்படச்செய்வார்கள்.  அவர்கள் நல்ல மக்கள் தொடர்பாளர்கள்.  பதவி, அதிகாரம் விரும்பத்தக்க விசயங்கள்.

உறவு
சட்டென முடிவு எடுக்கக்கூடியவர்கள் என்பதால் எதையும் வேகத்துடன் செய்வர்.  அதனால் உடன் இருப்பவர்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போவது சற்றே சிரமம்.  ஒவ்வொரு புதிய உறவிலும், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தரக் கூடியவர்கள்.  இத்தகைய தன்மை அவர்களது பிற்கால வாழ்வில் ஸ்திரமான, பலமான உறவினை ஏற்படுத்தக்கூடியது.

சுகாதாரம்
ஆரோக்கியமான உடல் கொண்டவர்கள்.  வாழ்க்கையைச் சரி நோக்கில் காண்பதால், அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருக்கும்.  விளையாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.  அவர்களை வெட்ட வெளியில் விட்டு விட்டால், மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவர்.  கட்டிப்போட்டால் மட்டுமே நோயுறுவர்.  தூக்கமின்மை நோயினால் தவிக்கும் வாய்ப்பும் உண்டு.

குதிரை வருடத்தைய பிரபலங்கள்
மகாகவி பாரதியார், கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எழுத்தாளர்கள் ஆர்.கே. நாராயணன், சிவசங்கரி, நடிகர்கள் கமலஹாசன், அமிதாப்பச்சன், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் ஷர்மா, நடிகர்கள் கிளிண்ட இஸ்ட்வுட், ஹரிசன் போர்ட், பாடகி ஜனேட் ஜாக்சன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் அமெரிக்க அதிபர் டேட்டி ரூஸ்வெல்ட், தொழிலதிபர் வாரன் படெட்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4, 8, 13, 14, 41, 43
ஒத்துப்போகும் விலங்குகள்: நாய், புலி, ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள்: எலி, குரங்கு
குதிரைவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும்போது வெவ்வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன சோதிடம் நம்புகிறது.

நெருப்புக்குதிரை
(ஜனவரி 25, 1906 - பிப்ரவரி 12, 1907
 ஜனவரி 21, 1966 - பிப்ரவரி 08, 1967)

குணங்கள்
உறுதியானவர்கள், முரணானவர்கள், மனஉறுதி மூலம் செயல்படுவர்கள்.  மயக்குபவர்கள்.  உள்ளுக்குள் எப்போதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும். அவர்கள் வாழ்க்கையின் முனையில் வாழ விரும்புவர்.  மாற்றங்களுக்கு எப்போதும் தயாராய் இருப்பர்.  மாற்றமே சுவாரசியம் என்று எண்ணுபவர்கள்.  கருத்தில் உறுதியுடையவர்கள்.  எங்குமே நெருப்புக்குதிரைவாசிகள் கருத்துக்களின் எல்லையில் நிற்க மாட்டார்கள்.

மர குதிரை
(பிப்ரவரி 03, 1954 - ஜனவரி 23, 1955
 ஜனவரி 31, 2014 - பிப்ரவரி 18, 2015)

குணங்கள்
உதவுதல், நம்பகத்தன்மை குணங்கள்.  முன்னேற்றம் பெற ஊக்கத்துடன் உழைக்க வல்லவர்கள்.  உறுதி, வலிமை, திறமான முடிவு அவர்களின் முக்கிய தன்மைகள்.  மாற்றாருடன் நன்கு பழகுவர்.  அவர்களிடம் நெருங்கிய உறவுகளிலும் தொழில் சார்ந்த விசயங்களிலும் வெற்றி பெறும் திறம் உண்டு.

பூமி குதிரை
(பிப்ரவரி 11, 1918 - ஜனவரி 31, 1919
 பிப்ரவரி 07, 1978 - ஜனவரி 27, 1979)

குணங்கள்
நம்பகத்தன்மை, விவேகம், நிதானம், தீர்கமான முடிவு எடுக்கும் தன்மை உடையவர்கள்.  எவ்வளவு காலமானாலும், தங்கள் குறிக்கோளுக்காக முயற்சி செய்து கொண்டே இருப்பர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழலை ஆராய்ந்து நன்முடிவை எடுப்பர்.  சூழலுக்கு ஏற்ப தங்களை பொருத்திக் கொள்வர்.  அவர்கள் வேடிக்கையானவர்களும்கூட.

உலோக குதிரை
(ஜனவரி 30, 1930 - பிப்ரவரி 16, 1931
 ஜனவரி 27, 1990 - பிப்ரவரி 14, 1991)

குணங்கள் 
பாசம், அகந்தை, பிடிவாதம் கொண்டவர்கள்.  போட்டியினால் ஊக்கம்கொண்டு உழைப்பார்கள்.  சொன்ன வாக்கை சாதாரணமாக எடுத்துச் செயல்படுவர்.  பொறுப்பைக் கொடுத்து அவர்களை எளிதில் அச்சுறுத்தலாம். ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவு, ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலை என்று இருக்க விரும்புவர்.  அதனால் துணையை விடவும் அவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர்.

நீர்க்குதிரை
(பிப்ரவரி 15, 1942 - பிப்ரவரி 04, 1943
 பிப்ரவரி 12, 2002 - ஜனவரி 31, 2003)

குணங்கள்
சுய கருத்துக்களில் பற்று, செயலால் ஊக்கம் கொள்பவர்.  உல்லாசப் பேர்வழி.  முரணானவர்.  சூழலுக்கு தங்களை எளிதில் பொருத்திக்கொள்வர்.  ஆனால் எளிதில் முடிவு எடுக்க முடியாதவர்கள்.  ஓடுகிற ஓட்டத்தில் செல்ல விரும்புவர்.  திறமான முடிவுகளை எடுக்க முடியாத காரணத்தால் எப்போதும் அடுத்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வல்லவர்கள்.  இது சற்றே தொந்தவராக இருந்தபோதும், நீர் குதிரைவாசிகள் இருக்கும்போது மகிழ்ச்சி தரக்கூடியதே.  அதனால் உடன் இருப்பவர்கள் அதற்குப் பழகிவிடுவர்.

நீங்கள் குதிரை வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர். குதிரை வருடம் முன்னேற்றம் தரும் வருடம்.  மகிழ்ச்சிகரமானது.  துணிச்சலான காரியங்கள் செய்யத் தகுந்த வருடம்.  திருப்தியைத் தரும் வருடம்.  துணிவும், தைரியமும் அதிகமாக செயல்படுமாதலால் வளர்ச்சி உயர உயரச் செல்லும். ஸ்திரமான சூழல் இருந்தபோதும், மற்ற வருடங்களில் நடப்பன போன்று அதிர வைக்கும் சம்பவங்கள் நிச்சயம் நடக்கும்.நேரம் - காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

1904, 1918, 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014, 2026, 2038, 2050 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தத் தொடரைப் படிப்போர் தாங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர் என்பதை முந்தைய தொடர்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.  இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஜனவரி 25, 1906 - பிப்ரவரி 12, 1907
பிப்ரவரி 11, 1918 - ஜனவரி 31, 1919
ஜனவரி 30, 1930 - பிப்ரவரி 16, 1931
பிப்ரவரி 15, 1942 - பிப்ரவரி 04, 1943
பிப்ரவரி 03, 1954 - ஜனவரி 23, 1955
ஜனவரி 21, 1966 - பிப்ரவரி 08,1967
பிப்ரவரி 07, 1978 - ஜனவரி 27, 1979
ஜனவரி 27, 1990 - பிப்ரவரி 14, 1991
பிப்ரவரி 12, 2002 - ஜனவரி 31,2003
ஜனவரி 31, 2014 - பிப்ரவரி 18,2015

இனி இந்தத்  தொடரில் குதிரை வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசங்களைப் பற்றிப் பார்ப்போம்.  குதிரைவாசிகள் உற்சாகம் மிகக் கொண்டவர்கள்.  எல்லோராலும் விரும்பப்படுவார்கள்.  பிடிவாதக்காரர்கள்.  சமயங்களில் எரிச்சலூட்டினாலும், பழகுவதற்கு உகந்தவர்கள்.

உண்மை, தோழமை, திறந்த மனம் போன்ற குணங்களைப் பெற்றவர்கள்.  சுதந்திரமாக, நடுவு நிலைமை கொண்டவராக, திறமைகள் பலவும் கொண்டவராக, சூழலுக்க ஏப்ட தன்னை பொருத்திக்கொள்பவராக, எப்போதும் துறுதுறுப்புடன் உயிர்ப்புடன் இருப்பவர்கள்.  உணர்வுபூர்வமானவர்கள்.  மனிதர்களையும், சூழலையும் சரியா எடை போட வல்லவர்கள்.  தங்களுக்குப் பிடித்ததை தன் வழியிலேயே செய்யும் சுதந்திரத்தை விரும்புபவர்கள்.  வேகமாக முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள்.  மறதி, சமயங்களில் பிரச்சனைகளைக் கொடுக்கும்.  இருந்தாலும் செய்வதைச் செய்து முடிக்க முயல்வர்.  நம்பகமானவர்கள்.  பொறாமை குணம் அற்றவர்கள்.

நேரத்தை வீணாக்குபவர்கள். அட்டவணைப்படி நடக்க விரும்பாதவர்கள்.  நண்பர்கள் குழுவில் பலர் இருந்தாலும் தான் செய்ய வேண்டிய வேலையைத் தான் விரும்பிய வழியில் செய்ய எண்ணம் கொண்டு செயல்படுவர். பலம், வேகம், பழக குணங்களைக் கொண்டவர்கள்.  முக்கிய நபராக எண்ணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுவர்.  சந்தோசமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்கள் என்பதால் கூட்டங்களில் தங்களது நகைச்சுவை மூலம் கூடியுள்ளவர்களை சந்தோசப்படுத்துவர்.

குதிரைவாசிகள் சிறந்த புத்திசாலிகள்.  புதிய விசயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்ள வல்லவர்கள்.  பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய சக்தி படைத்தவர்கள்.  ஆனால் தொடங்கிய பல வேலைகளை முடிக்க மாட்டார்கள்.  ஏனென்றால் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தே வேலை செய்கின்ற காரணத்தினால், இருக்கும் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, அடுத்த வேலைக்குத் தாவி விடுவார்கள்.  அவர்கள் தங்களைப் பற்றியே அதிகம் எண்ணிக்கொண்டே இருக்கும் காரணமாக, ஏதாவது தான் விரும்பியபடி நடக்கவில்லையென்றால், அதற்காகக் கோபப்பட்டு பக்கத்தில் உள்ளவர்களை சாடுவார்கள்.

அனைவரையும் கவரத்தக்கவர்கள்.  அவர்கள் தோழமை குணம் அதிகம் கொண்டவர்களாதலால், நிறைய மனிதர்கள் கூடியிருக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.  அவர்கள் பேசுவதில் சுகம் காண்பார்கள்.  அவர்கள் உற்சாகம் மிகக் கொண்டு, மாறுதல்களை வரவேற்பார்கள்.  அவர்கள் அதிகக் கோபம், அகந்ததை,மூர்க்கத்தனம் கொண்டவர்களாகவும், சில நேரங்களில் இருப்பார்கள்.  நேசிக்கும் அதே வேகத்தில் வெறுக்கவும் செய்வார்கள்.  வேகமாக நண்பர்களாவார்கள்.  அதே வேகத்தில் பழகுவதில் ஆர்வமற்றும் இருப்பார்கள்.

இன்று வாழ். நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற கொள்கை உடையவர்கள். துணிச்சல் மிக்கவர்கள்.  கூர்மையான அறிவு கொண்டவர்களாதலால் பண விசயங்களை திறம்படக் கையாளக் கூடியவர்கள்.  சுயமாக எதையும் செய்ய வல்லவர்கள்.  உற்சாகப் பேர்வழிகள்.  உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் விருப்பமானவை.  வேகமாக ஓடக் கூடியவர்கள்.  வேகமாகப் பேசினாலும் நளினமாகப் பேசுவர்.  தான் விரும்பிய வழியில் எதும் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவர்.  அப்படி நடக்கவில்லையென்றால் ஆவேசப்படுவர்.  எதைவிடவும் தங்கள் சுதந்திரத்தை விரும்புவர்.  யாரையும் பேராசைக் கண்ணோடு பார்க்க மாட்டார்கள்.  எதையும் உடைமை கொண்டாட மாட்டார்கள்.  மிகவும் அமைதியாக இருப்பர்.  உள்ளுணர்வைச் சார்ந்திருப்பர்.

குதிரைவாசிகள் புதிய புதிய எண்ணங்கள் கொண்டவர்கள்.  கடினமாக பிரச்சினைகளுக்கும் புதிய வழியில் தீர்வு காண்பர்.  ஒரு கருத்துத் தோன்றியதுமே, அதைச் செய்து முடிக்கத் துடிப்பர்.  வேலையை முடிக்கும் வரை நேரம் காலம் பார்க்க மாட்டார்கள்.  நேரமின்மை காரணமாக எந்த முடிவையும் விரைவில் எடுக்கத் துடிப்பர்.  தவறான முடிவாக இருந்தாலும் சரி, நேரத்தை வீணடிக்காமல் முடிவு எடுத்தால் சரி.

குதிரைவாசிகளுக்கு அவர்களது உணர்வுகளைக் காட்ட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.  பொறுமையற்றவர்கள்.  கோபம் மிகக் கொள்வார்கள்.  அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள்.  அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட முயல வேண்டும்.  குதிரைவாசி வீட்டில் இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரது கவனமும் அவர்களிடம் இருக்கும்படி நடந்து கொள்வார்கள்.  அவர்கள் எப்போதும் நடுநாயகமாக இருந்து, எல்லாம் அவர்களைச் சுற்றி நடக்க வேண்டும் என்று எண்ணும் இயல்பினர்.  அதற்கு பரிசாக, உழைத்து எல்லோருடனும் அதைப் பகிர்ந்துகொள்வர்.

தொழில்
கவிஞர். பயணக்கட்டுரையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, துணிகரச் செயல்கள் செய்பவர், பத்திரிக்கையாளர், மொழி பெயர்ப்பாளர், மொழி கற்பிப்பவர், சுற்றுலா உதவியாளர், நூலகர், விமான ஓட்டுநர், விற்பனையாளர், விளம்பரப் பணியாளர் பணிகள் உகந்தவை.

பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறம் படைத்தவர்கள்.  செயல்கள் நடந்து கொண்டு இருக்கும்போதே அதைத்தன் வழியே செய்ய வல்லவர்கள்.  நேரம் காலம் பாராமல் உழைக்கக்கூடியவர்கள்.  அவர்கள் பெரிதும் களைப்படையும் போது மட்டுமே வேலைச் செய்வதை நிறுத்துவார்கள்.  அவர்களுக்கு அன்றாடம் செய்யும் வேலை அட்டவணை என்பதெல்லாம் பிடிக்காத ஒன்று.  நேரப்படி காரியம் செய்ய விரும்பாதவர்கள்.  எப்போதும் தங்களை ஏதோவொரு செயலில் ஈடுபடுத்திய வண்ணம் இருப்பர்.

பலருடன் இணைந்து செய்யும் வேலைகளை விரும்பிச் செய்வர். ஆணைகளுக்கு அடி பணிவது அவர்களுக்கு பிடிக்காத விசயம்.  தினமும் ஒரே மாதிரியாக செய்யும்வேலைகளைக் கண்டு ஓடுவர்.  புதிய புதிய விசயங்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சமார்த்தியம் இருப்பதன் காரணமாக, அவர்கள் எல்லா வேலைகளையும் திறம்படச்செய்வார்கள்.  அவர்கள் நல்ல மக்கள் தொடர்பாளர்கள்.  பதவி, அதிகாரம் விரும்பத்தக்க விசயங்கள்.

உறவு
சட்டென முடிவு எடுக்கக்கூடியவர்கள் என்பதால் எதையும் வேகத்துடன் செய்வர்.  அதனால் உடன் இருப்பவர்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போவது சற்றே சிரமம்.  ஒவ்வொரு புதிய உறவிலும், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தரக் கூடியவர்கள்.  இத்தகைய தன்மை அவர்களது பிற்கால வாழ்வில் ஸ்திரமான, பலமான உறவினை ஏற்படுத்தக்கூடியது.

சுகாதாரம்
ஆரோக்கியமான உடல் கொண்டவர்கள்.  வாழ்க்கையைச் சரி நோக்கில் காண்பதால், அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருக்கும்.  விளையாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்.  அவர்களை வெட்ட வெளியில் விட்டு விட்டால், மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவர்.  கட்டிப்போட்டால் மட்டுமே நோயுறுவர்.  தூக்கமின்மை நோயினால் தவிக்கும் வாய்ப்பும் உண்டு.

குதிரை வருடத்தைய பிரபலங்கள்
மகாகவி பாரதியார், கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எழுத்தாளர்கள் ஆர்.கே. நாராயணன், சிவசங்கரி, நடிகர்கள் கமலஹாசன், அமிதாப்பச்சன், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் ஷர்மா, நடிகர்கள் கிளிண்ட இஸ்ட்வுட், ஹரிசன் போர்ட், பாடகி ஜனேட் ஜாக்சன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் அமெரிக்க அதிபர் டேட்டி ரூஸ்வெல்ட், தொழிலதிபர் வாரன் படெட்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4, 8, 13, 14, 41, 43
ஒத்துப்போகும் விலங்குகள்: நாய், புலி, ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள்: எலி, குரங்கு
குதிரைவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும்போது வெவ்வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன சோதிடம் நம்புகிறது.

நெருப்புக்குதிரை
(ஜனவரி 25, 1906 - பிப்ரவரி 12, 1907
 ஜனவரி 21, 1966 - பிப்ரவரி 08, 1967)

குணங்கள்
உறுதியானவர்கள், முரணானவர்கள், மனஉறுதி மூலம் செயல்படுவர்கள்.  மயக்குபவர்கள்.  உள்ளுக்குள் எப்போதும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கும். அவர்கள் வாழ்க்கையின் முனையில் வாழ விரும்புவர்.  மாற்றங்களுக்கு எப்போதும் தயாராய் இருப்பர்.  மாற்றமே சுவாரசியம் என்று எண்ணுபவர்கள்.  கருத்தில் உறுதியுடையவர்கள்.  எங்குமே நெருப்புக்குதிரைவாசிகள் கருத்துக்களின் எல்லையில் நிற்க மாட்டார்கள்.

மர குதிரை
(பிப்ரவரி 03, 1954 - ஜனவரி 23, 1955
 ஜனவரி 31, 2014 - பிப்ரவரி 18, 2015)

குணங்கள்
உதவுதல், நம்பகத்தன்மை குணங்கள்.  முன்னேற்றம் பெற ஊக்கத்துடன் உழைக்க வல்லவர்கள்.  உறுதி, வலிமை, திறமான முடிவு அவர்களின் முக்கிய தன்மைகள்.  மாற்றாருடன் நன்கு பழகுவர்.  அவர்களிடம் நெருங்கிய உறவுகளிலும் தொழில் சார்ந்த விசயங்களிலும் வெற்றி பெறும் திறம் உண்டு.

பூமி குதிரை
(பிப்ரவரி 11, 1918 - ஜனவரி 31, 1919
 பிப்ரவரி 07, 1978 - ஜனவரி 27, 1979)

குணங்கள்
நம்பகத்தன்மை, விவேகம், நிதானம், தீர்கமான முடிவு எடுக்கும் தன்மை உடையவர்கள்.  எவ்வளவு காலமானாலும், தங்கள் குறிக்கோளுக்காக முயற்சி செய்து கொண்டே இருப்பர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழலை ஆராய்ந்து நன்முடிவை எடுப்பர்.  சூழலுக்கு ஏற்ப தங்களை பொருத்திக் கொள்வர்.  அவர்கள் வேடிக்கையானவர்களும்கூட.

உலோக குதிரை
(ஜனவரி 30, 1930 - பிப்ரவரி 16, 1931
 ஜனவரி 27, 1990 - பிப்ரவரி 14, 1991)

குணங்கள் 
பாசம், அகந்தை, பிடிவாதம் கொண்டவர்கள்.  போட்டியினால் ஊக்கம்கொண்டு உழைப்பார்கள்.  சொன்ன வாக்கை சாதாரணமாக எடுத்துச் செயல்படுவர்.  பொறுப்பைக் கொடுத்து அவர்களை எளிதில் அச்சுறுத்தலாம். ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவு, ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலை என்று இருக்க விரும்புவர்.  அதனால் துணையை விடவும் அவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர்.

நீர்க்குதிரை
(பிப்ரவரி 15, 1942 - பிப்ரவரி 04, 1943
 பிப்ரவரி 12, 2002 - ஜனவரி 31, 2003)

குணங்கள்
சுய கருத்துக்களில் பற்று, செயலால் ஊக்கம் கொள்பவர்.  உல்லாசப் பேர்வழி.  முரணானவர்.  சூழலுக்கு தங்களை எளிதில் பொருத்திக்கொள்வர்.  ஆனால் எளிதில் முடிவு எடுக்க முடியாதவர்கள்.  ஓடுகிற ஓட்டத்தில் செல்ல விரும்புவர்.  திறமான முடிவுகளை எடுக்க முடியாத காரணத்தால் எப்போதும் அடுத்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வல்லவர்கள்.  இது சற்றே தொந்தவராக இருந்தபோதும், நீர் குதிரைவாசிகள் இருக்கும்போது மகிழ்ச்சி தரக்கூடியதே.  அதனால் உடன் இருப்பவர்கள் அதற்குப் பழகிவிடுவர்.

நீங்கள் குதிரை வருடத்தில் பிறந்திருந்தால், மேற்சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர். குதிரை வருடம் முன்னேற்றம் தரும் வருடம்.  மகிழ்ச்சிகரமானது.  துணிச்சலான காரியங்கள் செய்யத் தகுந்த வருடம்.  திருப்தியைத் தரும் வருடம்.  துணிவும், தைரியமும் அதிகமாக செயல்படுமாதலால் வளர்ச்சி உயர உயரச் செல்லும். ஸ்திரமான சூழல் இருந்தபோதும், மற்ற வருடங்களில் நடப்பன போன்று அதிர வைக்கும் சம்பவங்கள் நிச்சயம் நடக்கும்.