01-01-2021 முதல் 15-01-2021 வரை

01-01-2021 முதல் 15-01-2021 வரை

மேஷம் - விரும்பிய தொழிலை உருவாக்கி கொள்வீர்கள். சிறந்த கடமை உணர்வுடன் பணியாளர்கள் பணி செய்வீர்கள். மனசஞ்சலம் தீரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 9, 2, 7.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு தேங்காய் எண்ணை தீபமிட்டு வேண்டிக் கொள்ள நன்மை கிட்டும்.
 
ரிஷபம் - முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருக்குமிடத்திற்கு தகுந்தபடி மென்மேலும் வளர்ச்சியை பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்..
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 6, 3, 7.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமிட்டு வணங்கி வர கடன் தொல்லை தீரும்.
 
மிதுனம் - வேடிக்கையாக பேசினால் கூட விபரீதமாகும் என்பதால் வார்த்தைகளை குறைத்து கொள்வது நல்லது. தொழிலில் முன்னேற்றம் தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 5, 9, 2.
பரிகாரம் - வைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் சனிக்கிழமை போட்டு வர தடைப்பட்ட காரியம் விரைவில் நடக்கும்.
 
கடகம் - நினைத்ததை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியத்தை விரைவில் முடித்துக் கொடுப்பீர்கள். திறமைக்கு தகுந்த வருமானம் தொழிலில் கூடுதலாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 7, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய் தீபமிட்டு வணங்கி வர தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள்.
 
சிம்மம் - கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்கால திட்டங்களை செயல்படுத்தி நற்பலன் பெறுவீர்கள். புதிய விடயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 5, 9.
பரிகாரம் - திங்கள் கிழமைகளில் சில வழிபாடு செய்வதுவர வாழ்வில் நினைத்ததை சாதிப்பீர்கள். 
 
கன்னி - இடையூறுகளை களைந்து நன்மை பெறுவீர்கள் முக்கிய விஷயங்களில் நல்ல முடிவை எடுத்து நிறம்பட செயல்படுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெள்ளை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 5.
பரிகாரம் - செவ்வாய் கிழமை சுப்மணியரை வணங்கி இலுப்பெண்ணெய் தீபம் போட்டுவர சகல காரியமும் சித்தியாகும்.
 
துலாம் - சிந்தைகளை சிதறவிடாமல் செயலில் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்களுக்கு மரியாதையும், நன்மையும் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 7.
பரிகாரம் - நவகிரக வழிபாடு சனிக்கிழமைகளில் செய்து மூன்று முறை வலம் வந்து நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் கைகூடும்.
 
விருச்சிகம் - திட்டமிட்ட காரியங்களை குறுத்த நேரத்தில் செய்து மேன்மை அடைவீர்கள். தொழிலில் நாணயத்துடன் நடக்க எண்ணுவீர்கள். முயற்சிகளில் பெருபாலும் வெற்றியை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வணங்கி வர எடுத்த காரியம் மிகுந்த வெற்றியை தரும்.
 
தனுசு - தொழில் செய்து வருபவர் புதிய திட்டங்களுக்கு நல்ல வழி கிடைக்கும். முதலீடுகளில் கவனம் செலுத்தி உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். சாதிக்க நினைத்ததை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம் - நவகிரக சந்திரனுக்கு திங்கள் கிழமை தீபமிட்டு வெண்மை நிற பூ வைத்து வழிபட்டு வர சகல பாக்கியமும் கிட்டும்..
 
மகரம் - எதைச் செய்தாலும் அதில் நல்ல பலனை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அனுபவமும் பெறுவீர்கள். உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 8.
பரிகாரம் - மலைமேல் அமர்ந்த தெய்வத்தை வணங்கி சனிக்கிழமைகளில் சிறிய தானம் செய்ய பொருளாதாரம் மேன்மை பெறும்.
 
கும்பம் - செயல்பாடுகளில் தேக்கம் இருந்தாலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறுதியான முடிவுகளை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் தரிசனமும் வைரவர் தரிசனமும் செ்யது அன்னதானம் செய்ய சகல கஷ்டமும் நீங்கும். 
 
மீனம் - எடுத்த காரியம் வெற்றியை தரும். பாதியில் நின்றுவிட்ட செயல்கள் நல்ல பலனை தரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றியும், பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 8.
பரிகாரம் - வியாழகிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து தீபமிட்டு வழிபாடு செய்துவர தொழிலில் மேன்மையை அடைவீர்கள்.