01.04.2021 முதல் 15.04.2021 வரை
மேஷம்
விரும்பிய வாழ்க்கையை அடைவீர்கள் சாதிக்க நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். எதிலும் அக்கறையுடன் செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வாழ்வில் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 4, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய் தீபமிட்டு மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிபட நினைத்தது கைகூடும்.
ரிஷபம்
தொடர்ந்து உங்களின் காரியம் வெற்றியை நோக்கி செயல்பட ஆரம்பிக்கும். விடுபட்ட விடயங்களில் திறம்பட செயல்பட்டு முடித்து வைப்பீர்கள். முக்கிய தகவல்கள் உங்களை ஊக்குவிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 7.
பரிகாரம் - செவ்வாய் கிழமை மாரியம்மனுக்கு வேப்பிலையில் அடுக்கி விளக்கெண்ணெய் தீபமிட்டு வேண்டுதல் செய்ய சகல காரியமும் வெற்றி கிட்டும்.
மிதுனம்
குடும்ப சுமைகளிலிருந்து விடுபட சிலருக்கு வாய்ப்புகள் அமையும். செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டி வரும். புதிய திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 5.
பரிகாரம் - பச்சைப் பட்டு துணியில் பாசி பயறு கைபிடி எடுத்து முருகனுக்கு முன் வைத்து இலுப்பெண்ணெய் தீபமிட உங்களின் சகல காரியமும் வெற்றி பெறும்.
கடகம்
கனவில் கண்ட காட்சிகள் நிஜம் ஆகும். புதிய சாதனைகளை செய்யும் வாய்ப்புகளை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அரசியலில் உங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை காலை 06 - 07-க்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், வாழைப்பழமும் வைத்து வேண்டி கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
சிம்மம்
எதை செய்து முடிக்க வேண்டிமென்று நினைத்தீர்களோ அதை செய்து முடிப்பீர்கள். எதையும் வேடிக்கை பார்க்காமல் உடனுக்குடன் அதிரடி முடிவுகளை எடுத்து எதையும் சாதித்து காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 9.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் அம்மனுக்கு திருமஞ்சனம் கொடுத்து நெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் லட்சிய கனவுகளில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள்.
கன்னி
சாதகமான விடயங்களை உடனே செய்து முடிப்பீர்கள் அதிகம் சிரமமின்றி காரியங்களை செயல்படுத்துவீர்கள். கலை துறையினருக்கு நல்ல வெகுமதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 5.
பரிகாரம் - மலைமேலிருக்கும் சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றி தரும்.
துலாம்
போட்டிகளை வென்று சாதித்துக் காட்டுவீர்கள். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும். உங்களை நம்பியுள்ள நண்பர்களுக்கு உண்மையாக நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - நவகிரக கேதுவுக்கு செவ்வாய்கிழமை காலை 06 - 07-க்குள் தேங்காய் எண்ணெய் தீபமிட சகல காரியமும் சித்தியாகும்.
விருச்சிகம்
விரிவான உங்களின் திட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும். குறைந்த முதலீடுகளில் தொழில் துவங்கும். நல்ல வாய்ப்பு சிலருக்கு கிடைக்க பெற்று வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, பலவர்ணம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 7, 9.
பரிகாரம் - மஞ்சள் கிழங்கில் வெற்றிலை சுற்றி கோவில் மர கிளையில் கட்டிவிட உங்களின் காரியம் சீக்கிரம் கைகூடும்.
தனுசு
கொடுத்து வைத்த இடத்தில் வராத பணம் வந்து சேரும் முடியாத காரியத்தை கூட செயல்படுத்தி வெற்று பெறுவீர்கள். அவசரமான காரியங்களில் சற்று நிதானம் அவசியம் வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனுக்கு நெய் தீபமிட்டு பலவர்ண பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.
மகரம்
துணிச்சலமான உங்களின் செயல்பாடுகள் மேலும் நன்மையை தரும். சக நண்பருக்கு உதவி செய்ய உங்களுக்கு சிரமம் வந்து சேரும். விரைவான உங்களின் சேவை நல்ல பலனை தரும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - முக்கிய காரியங்களுக்கு செல்லும் போது உடன் பச்சை நிற துணி எடுத்து செல்வதும், பச்சை நிற பேனா பயன்படுத்துவதும் நன்மை தரும்.
கும்பம்
அவசரமான அத்தியாவசயமான செலவுகளை தவிர்க்க முடியாது. புதிய திட்டங்களுக்கு முயற்சிகளை மேற்கொள்ள சரியான தருணம். குடும்பத்தில் சிறு குழப்பம் நீடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு பொங்கல் நைவேத்தியம் செய்ய தடைகள் நீங்கி நன்மை கிட்டும்.
மீனம்
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மிதமான உங்களின் காரியம் விரைவில் முடியும். நிலையான தொழிலில் முதலீடு செய்ய சிலருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரை சாதம் நைவேத்தியம் செய்ய சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
R.ஆனந்தன்
91-9289341554