01.05.2021 முதல் 15.05.2021 வரை

01.05.2021 முதல் 15.05.2021 வரை

மேஷம்
விருந்தினர் வருகையில் மகிழ்ச்சி பொங்கும். நினைத்தபடி செயல்பாடுகளை நடத்துவீர்கள். சரியான வழிகளில் உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு செய்து, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும், நினைத்தது நடக்கும்.
 
ரிஷபம்
சுறுசுறுப்பான உங்கள் செயல்பாடுகளால் எதையும் சாதித்து விடுவீர்கள். உங்களின் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணம் தாராளமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 5, 8, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியர் வழிபாடும் செய்வது சிறப்பு.
 
மிதுனம்
ஒரு செயலை செய்து முடிக்கும் வரை முழுமையாக அதிலேயே கவனம் செலுத்துவீர்கள். சரியான திசையில் உங்களின் செயல்பாடுகள் இருக்கும். பொருளாதாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம் - சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, தயிர் சாதம் தானமிட எல்லாம் நன்மையாக அமையும்.
 
கடகம்
காலத்தை கணித்து செயல்படும் உங்களுக்கு சில நேரம் தடுமாற்றம் வரலாம். இருந்தாலும் உங்களின் திறமையால் எல்லாவற்றையும் வென்று சாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 5, 8.
பரிகாரம் - ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, அரளிப் பூ மாலை சாத்தி வழிபட எல்லாம் சிறக்கும்.
 
சிம்மம்
காரியத்தில் இறங்கி விட்டால் அதில் முழுமையாக செயல்பட ஆரம்பித்து முடித்துக் காட்டுவீர்கள். உதவி என்று வந்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, பலவர்ணம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 7, 9.
பரிகாரம் - திங்கள்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சாத்தி தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றினால், சகலமும் சாத்தியாகும்.
 
கன்னி
பல சாதனைகளை படைக்கும் உங்களின் செயல்பாடுகளில் பல மாற்றங்களை உருவாக்குவீர்கள். கணிதத்தில் சிறந்து விளங்குவீர்கள். தொழிலில் மேன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 8.
பரிகாரம் - சனிக்கிழமை நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகலமும் நன்மையாக இருக்கும்.
 
துலாம்
துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் சமமாகவே பார்க்கும் குணமுள்ளவர். உங்களுக்கென்று தனி திறமையால்  எல்லாவற்றையும் செயல்படுத்தி மேன்மை கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை நாகதேவதைக்கு, நவகிரக கேதுவுக்கு நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல தடையும் நீங்கும்.
 
விருச்சிகம்
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் உங்களின் பண்பு எதிரிக்கு கூட அச்சத்தைத் தரும். செய்யும் தொழிலில் இருந்து வந்த தடை நீங்கி. முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 8.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள நினைத்தது நடக்கும்.
 
தனுசு
தனி செயல்பாடுகளை ஊக்கபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். பயன்படுத்திய பொருட்களை பிறருக்கு தானம் தரமாட்டீர்கள். கடமையை செய்து பலன் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் எட்டு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டுதல் நிறைவேறும்.
 
மகரம்
வருமானத்தை எதிர்பார்த்து தொழில் செய்வதில் சிக்கல் இருந்தாலும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். அரசியல் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து இலுப்பெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
 
கும்பம்
திட்டமிட்டபடி எல்லாம் சிறப்பாக அமையும். உங்களிடம் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வீர்கள். தனி மனிதனாக நின்று சாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள நினைத்தது நடக்கும்.
 
மீனம்
மனவலிமையுடன் செயல்களில் ஈடுபாடு கொள்வீர்கள். உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 8.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு துவரை அன்னம் தானம் செய்ய சர்வமும் ஜெயமாகும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554