01.06.2021 முதல் 15.06.2021 வரை

01.06.2021 முதல் 15.06.2021 வரை

மேஷம்
வளமான வாழ்வுக்கு வழி கிடைக்கும். சரியான பாதையை தேர்வு செயல்பட வழி கிடைக்கும். அரசாங்க பணியில் சேவை செய்யும் வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 5, 3.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மன் ஆலய வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வர சகல காரியமும் சித்தியாகும்.
 
ரிஷபம்
வரவுக்குள் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படும் உங்களின் செயல்பாடுகளில் சில நேரம் தடைப்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 6, 8, 9.
பரிகாரம் - நாகதேவதை வழிபாடு செய்வதும், சுப்பிரமணியர் வழிபாடு செய்வதும் உங்களின் வாழ்வை வளம் பெற செய்யும்.
 
மிதுனம்
வருமானத்தை பெருக்கி கொள்ளும் யுக்தியை பற்றி ஆலோசனை செய்து செயல்படுவீர்கள். பணியில் உங்களின் கவனம் பாராட்டும்படி இருக்கும். தேவைகளுக்கு பணம் வரும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மனையும் வழிபாடு செய்வது உங்களின் வாழ்வு மேம்படும்.
 
கடகம்
விரும்பிய வாழ்வுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சு உங்களின் வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு மஞ்சள் பொடி தூவி நெய் தீபம் மூன்று ஏற்றி வழிபட சகலமும் வெற்றி கிட்டும்.
 
சிம்மம்
வித்தியாசமான கோணத்தில் காரியங்களை செயல்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். புதிய திட்டங்களுக்கு வழி கிடைக்கும். தேவைக்கு பண உதவி கிடைக்கும். எதிர்காலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு காலை 6-7 மணிக்குள் தேங்காய் எண்ணெய் தீபமிட காரிய அனுகூலம் உண்டாகும்.
 
கன்னி
விடை தெரியாத சில காரியங்களுக்கு விரைவில் தீர்வு உண்டாகும். பாதியில் நின்ற காரியம் கைகூடும் சரியான நேரத்தில் உங்களின் வாழ்வில் வளம் பெற செய்யும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - ஞாயிற்று கிழமைகைளில் நவகிரக வழிபாடு மாலை 04.30 - 06.00 மணிக்கு விளக்கு ஏற்றி வர காரிய வெற்றி கிட்டும். 
 
துலாம்
விடாமுயற்சியும், செயல்திறனும் கொண்டு காரியத்தில் நினைத்ததை சாதிக்கும் வழி கிட்டும். தொழிலில் நல்லபடி முன்னேற்றம் உண்டாகும். உங்களின் பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு வர செயலில் வெற்றி கிடைக்கும்.
 
விருச்சிகம்
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் படிப்படியாக பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் வளம் பெற்று மேன்மை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 9.
பரிகாரம் - செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் வழிபாடு செய்து தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் வெற்றி கிட்டும்.
 
தனுசு
விளையாட்டு துறையிலும், உத்தியோகத்திலும் சரியான பலன்களை பெறுவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் தேவைகளுக்கு வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - சனிக்கிழமை ராகு காலத்தில் சுப்ரமணியர் வழிபாடும். நவகிரக வழிபாடும் உங்களின் வெற்றிக்கு வளம் பெற செய்யும்.
 
மகரம்
வசதியான வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரம் கிடைக்க பெறுவீர்கள். உடல் நலனின் முன்னேற்றம் கிட்டும் தொழிலிலும், உத்தியோகத்திலும் வளர்ச்சி பெற்று மேன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - உங்களின் முன்னோர்கள் வழிபாடு செய்வதும் வறுமையி்ல் இருப்பவருக்கு உதவி செய்வதும் உங்களின் வளர்ச்சி வழி வகுக்கும்.
 
கும்பம்
வளமான வாழ்வுக்கு வழிகிடைக்கும். நீதானமான உங்களின் செயல்பாடுகள் வெற்றியை தரும். உங்களின் மனவலிமை பெருகி செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - ஞாயிறு அன்று ராகு காலத்தில் 8 நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் வாழ்வு வளம் பெறும்.
 
மீனம்
வாழ்க்கை மேம்பாடு அடையும் வழிகளை பின்பற்றி வளம் பெறுவீர்கள். சரியான வழிகளை தேர்வு செய்து உங்களின் பயணம் பாராட்டும்படி அமையும். தொழிலில் சிறந்த வளர்ச்சி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - வியாழக்கிழமை நவகிரக குருவுக்கும் செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கும் நெய் தீபமிட்டு வர சகல காரியமும் வெற்றி கிட்டும்.
 
கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554