16-05-2021 முதல் 31-05-2021 வரை

16-05-2021 முதல் 31-05-2021 வரை

மேஷம்
உறுதியான முடிவுகளை எடுத்து மேலும் பல காரியங்களை செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்களை மேம்படுத்த சரியான ஆலோசனைகளை தேர்வு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மன் ஆலய வழிபாடு செய்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகலமும் விருத்தியாகும்.
 
ரிஷபம்
வெளி வட்டார அனுகூலம் சிறப்பாக அமையும்.தெரிந்த விடயங்களில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு தொழிலிலும், உத்தியோகத்திலும் மேம்பாடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண் - 3, 5, 6.
பரிகாரம் - வியாழக்கிழமை விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டி கொள்ள எல்லாம் நலம் பெறும்.
 
மிதுனம்
எதை செய்தால் நன்மை என்று உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கு தகுந்த ஊதியம் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 9.
பரிகாரம்  - சனிக்கிழமைகளில் பைரவருக்கு 5 மிளகு துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபமிட தடை நீங்கி நன்மை உண்டாகும்.
 
கடகம்
செய்வதை திருந்த செய்வீர்கள். கால தாமதத்தை அனுமதிக்கமாட்டீர்கள். எதிலும் கடமை தவறாமல் இருக்க வேண்டுமென்று நினைத்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 1, 6, 9.
பரிகாரம் - வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி நெய் தீபம் மூன்று ஏற்றி வேண்டி கொள்ள நன்மை உண்டாகும்.
 
சிம்மம்
தனக்கென்று இருக்கும் செயல்பாடுகளை தீவிரமாக செயல்பட்டு சரிசெய்து கொள்வீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 9.
பரிகாரம் - சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து வேண்டிக் கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
 
கன்னி
மருத்துவ துறையிலும், ஆசிரியர் பணியிலும் சிறந்து விளங்குவீர்கள். தொழிலில் முன்பைவிட சிறப்பாக அமையப் பெறுவீர்கள். பொருளாதார வளர்ச்சி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, நீலம், பலவர்ணம்.
அதிர்ஷ்ட எண் - 5, 7, 8.
பரிகாரம் - ஞாயிற்று கிழமைகைளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து 3 நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகலமும் நன்மை தரும்.
 
துலாம்
முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெறுவதும், தொழிலில் மேன்மை அடையவும் வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 9.
பரிகாரம் - நவகிரக கேதுவுக்கு வியாழகிழமை காலை 06-07-க்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள நன்மை உண்டாகும்.
 
விருச்சிகம்
குடும்பத்திலிருந்து வந்த குழப்பம் தீரும். உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடவுளின் ஆதரவும், நண்பர்களின் உதவியும் உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, நீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண் - 5, 8, 9.
பரிகாரம் - வெள்ளிக்கிழமை அம்மனுக்கும், செவ்வாய்கிழமை விநாயகருக்கும் நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகலமும் மேன்மை பெறும்.
 
தனுசு
உங்களுக்கென்று ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் வந்து உங்களுக்கு மேலும் நற்பலனை தரும்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகலமும் வளம் பெறும்.
 
மகரம்
வேண்டியபடியே பெறும் வளர்ச்சியை பெறுவீர்கள். திறமையான நிர்வாக செயல்பாடுகளால் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து நெய் தீப ஏற்றி வேண்டிக் கொள்ள சகலமும் வெற்றி கிட்டும்.
 
கும்பம்
எண்ண குழப்பம் இருந்தாலும் தெளிவான முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். தொழிலில் முன்பைவிட முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதாரம் வளம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 8, 9.
பரிகாரம் - சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து ஒன்பது நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டி கொள்ள சகலத்திலும் வளம் பெறும்.
 
மீனம்
நினைத்த காரியம் கைகூடும். தேவையற்ற செலவீனம் வந்து வளர்ச்சிக்கு தடை வந்தாலும் அதனைத் திறம்படச் சமாளித்து உங்களை மேம்படுத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு 3 நெய் தீபமிட்டு வணங்கி கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554