16-07-2021 முதல் 31-07-2021 வரை

16-07-2021 முதல் 31-07-2021 வரை

மேஷம்
வளமான எதிர்காலம் அமையப் பெறுவீர்கள். புதிய திட்டங்களுக்கு வழி வகை அமையும். எந்த வித பிரச்சனைகளாக இருந்தாலும் தானே சரியாகி விடும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, மஞ்சள், பச்சை.
அதிர்ஷ்ட எண் - 3, 4, 5.
பரிகாரம் - வெள்ளிகிழமைகளில் மாரியம்மனுக்கு தீபமிட்டு மஞ்சள் பொடி வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் தடையின்றி கைகூடும்.
 
ரிஷபம்
மனதில் நினைத்த காரியத்தை செயல்படுத்த உங்களின் செயல்பாடுகள் அமையும். எடுத்த காரியத்தை விரைவில் முடிக்க உங்களின் கவனம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, பச்சை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 5.
பரிகாரம் - திங்கள் கிழமை சிவன் ஆலய தரிசனம் செய்து வில்வ அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள, உங்களின் தொழிலும், பணியும் சிறப்பாக வளர்ச்சி பெறும்.
 
மிதுனம்
சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். விரும்பமான செயல்களில் சில தடைவந்து மறையும். குறுகிய காலத்தில் சிலருக்கு எதிர்பாராத தனவரவு வந்து சேரும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, சிவப்பு, கருப்பு.
அதிர்ஷ்ட எண் - 4, 6, 9.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடத்தேரும்.
 
கடகம்
சொத்து சம்மந்தமான பேச்சு நல்ல முடிவுக்கு வரும். கடன் கொடுத்த இடத்தில் விரைவில் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வும், பணிமாற்றமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, பச்சை, நீலம்.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 8.
பரிகாரம் - வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு கடலை மாவு உருண்டை வைத்து வேண்டிக் கொள்ள, அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.
 
சிம்மம்
கடமையை சரியாக செய்து நற்பெயர் பெறுவீர்கள். நீண்டநாள் காரியம் நிறைவேறும் மகிழ்ச்சி பெருகும். அரசியலில் முதன்மை பெற்று நினைத்ததை சாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 1, 2, 3.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் நவகிரக கேதுவுக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், தர்ப்பையும் வைத்து வணங்கி வர தொழிலும், உத்தியோகமும் சிறக்கும்.
 
கன்னி
விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்று நினைத்து பல விடயங்களை தள்ளிப்போடாமல் முடியக்கூடியதை மட்டும் செயல்படுத்தி உங்களின் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 5.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வாழைப்பழம் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்ல எல்லாம் சிறப்பாக அமையும்.
 
துலாம்
தன்னைப் பற்றி கவலைபடாமல் சிறந்த ஒவியராகவும், எழுத்தாளராகவும் விளங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியம் நடக்கும் வாய்ப்புகளையும், தொழிலில் வளர்ச்சியும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண் - 6, 7, 9.
பரிகாரம் - ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் நவகிரகத்திற்கு 5 விளக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள எடுத்த காரியம் விரைவில் நிறைவேறி வளர்த்துக் கொள்ளலாம்.
 
விருச்சிகம்
மென்மையான காரியங்களில் எளிமையாக முடித்து விடுவீர்கள். முடிவெடுக்கும் முன் உங்களுக்கு எதிர்பார்த்த சில காரியம் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 5, 9.
பரிகாரம் - எளிய மக்களுக்கு மருத்துவ உதவியும் மருந்து பொருட்களும் வாங்கி தந்து வாழ்த்துக்கள் பெறுவதன் மூலம் உங்களின் நற்பலன்களை மேலும் வளம் பெறலாம்.
 
தனுசு
குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். பலவித சுமைகளிலிருந்து படிப்படியாக மீண்டு வருவீர்கள். தொழிலில் வேறுபட்ட மனநிலையில் வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண் - 1, 3, 6.
பரிகாரம் - சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வெண்ணை வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
 
மகரம்
மனதைரியத்துடன் செயல்படுவீர்கள். எதையும் சவாலாக ஏற்று வெற்றி காண்பீர்கள். தொழிலில் போட்டி மறைந்து நன்மை பெறுவீர்கள். அரசியலில் புதிய பரிமாற்றம் வரும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட எண் - 3, 6, 8.
பரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர உங்களின் சகல காரியமும் சிறப்பாக அமையும்.
 
கும்பம்
உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும் சிலநேரம் தொழிலில் போட்டியால் மனவலிமை குறையும். எதிலும் உங்களின் கௌரவத்தை விட்டு கொடுக்கமாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், கருப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 3, 4, 6.
பரிகாரம் - செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரை சாதம் நைவேத்தியம் வைத்து வேண்டிக்கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.
 
மீனம்
தொழிலில் வளம் பெறுவீர்கள். எதையும் கணித்து செயல்படுவீர்கள். எதிலும் அவசரமின்றி நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட எண் - 2, 3, 8.
பரிகாரம் - திங்கள் கிழமைகளின் சிவன் வழிபாடு செய்து வெண் தாமரை மலர் வைத்து நெய் தீபமேற்றி வணங்கி வர, எல்லாம் நன்மையாகவும், வெற்றியாகவும் நடைபெறும்.

கணித்தவர் அருள்வாக்கு ஜோதிடர்
வாடிபட்டி R.ஆனந்தன்
செல் - 91-9789341554