2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு

உறுதியான எண்ணம் கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை மறைவு ஸ்தானங்களில் இருந்த ராகு / கேது, இனி வரும் 21.03.2022 முதல் ராகு பஞ்சம ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் அமர்வது உங்களின் வளமான வாழ்வுக்கு வழி கிடைக்கும். 
 
மனத்திற்கு என்ன தோன்றியதோ அதை செயல்படுத்திவந்தீர்கள். குடும்பத்தில் யாரை நம்பினீர்களோ அவர்களே உங்களுக்கு துரோகம் செய்ததை உணர்வீர்கள். உங்களின் பூர்வ புண்ணியம் ராகுவால் கெடுபலன்களை தந்தாலும், உங்களுக்கு இனிமேல் நல்லதே நடக்கும். லாப ஸ்தானத்தில் கேது அமர்வது தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைய செய்யும். சிலருக்கு அருள்வாக்கு சித்தியாகும். தன்னை நம்பி வருபவருக்கு நல்லன சொல்லி வாழ்த்தும் போது அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வெளிநாடு முயற்சிகள் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள். சந்தர்ப்பவாதிகளின் சதி வேலையை புரிந்து கொண்டு இனி எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். கால நேரமின்றி உழைத்து முன்னேறும் வாய்ப்புகள் அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களுக்கு தெரிந்து சில காரியம் நிறைவேறும். மகிழ்ச்சி பொங்கும் சுபகாரியம் நடக்கும்.
 
இனி உங்களின் ராசிக்கு ஐந்தாமிடத்தில் ராகு அமர்வது பூர்வ புண்ணியஸ்தானம் கெட்டுவிடும். எடுத்த முயற்சிகள் கடும் போராட்டத்தில் முடியும் என்றாலும், செவ்வாய் வீடு என்பதால் உங்களுக்கு கெடுபலன்கள் குறையும். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் சில சோதனைகளை சந்திக்க வேண்டிவரும் தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்தி முக்கியமான விடயத்தில் கோட்டைவிட்டு விடுவீர்கள். சுக்கிரன் நட்சத்திரத்தில் ராகு இருக்கும் காலம் எதிர்ப்புகள் குறையும் நற்பலன்கள் உண்டாகும். எதையும் முடியும் என்று நம்பிக்கை கொள்வீர்கள். சுபகாரியம் நடக்கும். கேது நட்சத்திரத்தில் ராகு அமரும் போது காரிய தடை, முயற்சிகளுக்கு பலசோதனைகள் வந்து மறையும். 
 
இனி கேது லாபஸ்தானத்தில் அமரும் நிலை யோக பலன்களை பெற்று தரும். கேதுவால் பொருளாதார நிலை வளர்ச்சியை தரும். கேது விசாக நட்சத்திரத்தில் இருக்கும் காலம் பண பலம் அதிகரிக்கும். தேவைகளுக்கேற்ற வருமானம் கிடைக்கும். எதற்கு துணிவுடன் செயல்படுவீர்கள்.
 
பரிகாரம்:
 
செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் மாரியம்மன் வழிபாடு செய்து சிவப்பு நிற பூ வைத்து நெய் தீப மேற்றி வணங்கி வர உங்களின் சகல குறைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554