2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மகரம்

எல்லோரும் வளமாக இருக்கவேண்டு மென நினைக்கும் மகர ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும் லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருந்தார்கள். பல தரபட்ட சோதனைகளை நீங்கி கடைசியில் சமீபத்தில் ஓரளவு தன்னிறைவை அடைந்தீர்கள். இனி வரும் 21.03.2022 முதல் ராகு சுகஸ்தானத்திலும் கேது தொழில் ஸ்தானத்திலும் அமர்வது கேந்திரத்தில் அமரும் ராகு / கேது உங்களின் மேன்மையை வளம் பெற செய்வார்கள். 
 
ராசிநாதன் உங்களுக்கு பல உதவிகளை செய்து மேன்மை அடைய செய்வார்கள். காலத்தை அறிந்து செயல்படும் உங்களின் வளர்ச்சிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுகஸ்தானத்தில் ராகு உங்களுக்கு வாகன வசதிகளையும், வீடு கட்டும் யோகத்தையும், தருவார் கேது நீண்ட நாள் தடைபட்ட தொழிலில் வளர்ச்சியை பெற்று தருவார். வெளிநாட்டு வர்த்தக தொடர்பு நல்ல பலனை பெற்று தரும். தேவையற்ற சில சங்கடங்கள் விலகி, நன்மை அடைவீர்கள். வெளிபடையான உங்களின் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். மெழுகு போன்ற ஒளி தரும் பிம்பம் போல பிறருக்கு உதவி செய்வதில் மிகவும் ஆர்வம் கொள்வீர்கள். கூட்டுத் தொழில் செய்து பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு அமையும். தங்களின் எதிர்காலத்தை கவனமுடன் கொண்டு செல்லும் யுக்தியுடன் செயல்பட்டு வளம் பெறுவீர்கள். 
 
இனி ராகு உங்களின் சுகஸ்தானத்தில் அமர்வதும் செவ்வாய் வீடு என்பதால் நன்மையே உண்டாகும். ராகு சூரிய நட்சத்திரத்தில் இருக்கும் காலம் அரசியலில் வளம் பெற்று புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். சுக்கிரன் நட்சத்திரத்தில் ராகு அமரும்போது மனைவி கணவன் உறவு பலப்படும். குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும். நினைத்தபடி நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். கேதுவின் நட்சத்திரத்தில் மகிழ்ச்சியாக சென்று வருவீர்கள். சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இனி கேது உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருப்பது தொழிலில் வளம் பெற்று முன்னேற்றம் காண்பீர்கள். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் உங்களின் தேவைகள் நிறைவேறும். புதிய திட்டங்களுக்கு வழி கிடைக்கும். எதையும் உணர்ந்து செயல்படுவீர்கள்.

பரிகாரம்: 
 
ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடும். துர்க்கை அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் வளர்ச்சிக்கு வரும் தடை நீங்கி சுபிட்சம் பெற்று வளமுடன் வாழ்வீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554