2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மீனம்

நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!

உங்களின் ராசிக்கு இதுவரை மூன்றில் ராகுவும். பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து செயல்பட்டு வந்தார்கள் பல நன்மைகளையும் தொழிலிலும், உத்தியோகத்திலும் வளர்ச்சியையும் பொருளாதாரத்தில் நன்மையும் அடைந்தீர்கள். இனி வரும் 21.03.2022 முதல் தனஸ்தானத்தில் ராகுவும் அட்டம ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து நாகதோசத்தை பெறுகிறீர்கள் இருந்தாலும் உங்களின் ராசி எந்த விதமான கெடுபலனும் அமையாது. தேவைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்துவீர்கள். 
 
காரியத்தில் கவனமுடன் செயல்படுவதும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். பசுமையான சூழ்நிலை உங்களை மகிழ்ச்சி அடைய செய்யும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக  அமையும். சொந்த காலில் நிற்கும் (யாரையும் எதிர்பாராமல்) பாக்கியம் கிடைக்கும். பண பலம் அதிகரிக்கும். சுயமுயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
 
இனி உங்களின் ராசிக்கு ராகு தனஸ்தானத்தில் அமரும் காலம் பொருளாதாரத்தில் வளம் கிடைக்கும். திருமண தடை உண்டாகும் வாக்கு வாதம் அடிக்கடி செய்து வருவீர்கள். ராகு சூரியனின் நட்சத்திரத்திலிருக்கும் காலம் உறுதியுடன் செயல்படுவீர்கள். தொழில் கடன், வீட்டு கடன் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சுக்கிரனின் நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். தொழிலிலும், பங்கு சந்தையிலும் முன்னேற்றம் பெறுவீர்கள். கல்வி சாலைகளில் குழந்தைகளில் கல்வியை மேம்படுத்த நீங்கள் முயற்சி எடுத்தும் தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும். ராகு கேதுவின் நட்சத்திரத்திலிருக்கும் காலம் திருமண தடை, செல்வாக்கு குறைவு, பேச்சில் கண்ணியமின்மை இருந்தாலும் அதிக தொல்லை தராது. இனி கேது அட்டம ஸ்தானத்திலிருந்து வரும் காலம் சில காரிய தடைகள் உண்டாகலாம். கேது விசாக நட்சத்திரத்திலிருக்கும் காலம் உங்களின் எண்ணம் செயலாக மாறும். எடுத்த காரியம் சிறப்பாக நடக்கும். ராகு நட்சத்திரத்தில் கேது இருக்கும் காலம் எண்ணியபடி செயல்கள் நடக்கும்.
 
பரிகாரம்: 
 
செவ்வாய் கிழமை தவறாமல் அம்மன் வழிபாடு துர்க்கைக்கு தேசிகாய் (எலுமிச்சை) தோலில் விளக்கு ஏற்றி சிவப்பு நிறம், வெள்ளை நிற பூ வைத்து தொடர்ந்து வேண்டிக் கொள்ள உங்களின் மேன்மை வளம் பெற்று சிறப்பாக அமையும்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554