2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

தனி திறமைகளை கொண்டு செயல்பட்டு வரும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரையிலும் விரைய ஸ்தானத்திலிருந்த ராகு லாப ஸ்தானத்திற்கும், ஆறாமிடத்தில் இருந்த கேது, பஞ்சம ஸ்தானத்தில் அமருவது, உங்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரிய காலமாக அமையும்.
 
இதுவரை எந்த எதிர்ப்பு இல்லாமல் முடிவெடுத்தீர்கள். இனிமேல் உங்களின் முடிவுக்கு சில எதிர்ப்புகள் வரலாம். ஆனால் தொழிலில் மேன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் சரியாகும். தெரிந்த விடயங்களைவிட தெரியாத விடயங்களில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். எதையும் தீர்மானிக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. உங்களிடம் உள்ள திறமையை உணர்ந்து செயல்படுவது நன்மை தரும்.
 
இனி ராகு இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி, உங்களின் ராசியை பார்ப்பது எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களையும் பொருளாதார வளர்ச்சியையும் பெற்று தருவார். சூரிய நட்சத்திரத்தில் இருக்கும் இரண்டு மாத காலத்திற்கு அரசாங்க காரியம் வெற்றியை தரும். அரசியலில் சிலருக்கு பதவி கிடைக்கும். சுக்கிரன் நட்சத்திரத்தில் ராகு இருக்கும் காலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பும், வெளிநாட்டு தொழிலும் உண்டாகும். பல நாட்கள் கனவு நனவாகும்.நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். 
 
இனி கேது உங்களின் ராசிக்கு ஐந்தாமிடத்தில் அமர்வது பூர்வீக சொத்தில் பல பிரச்சனைகள் வரலாம். எதையும் அனுபவிக்க விடாமல் தடை வரலாம் என்றாலும், குரு பார்வை இருக்கும் வரை உங்களுக்கு சாதகமான வளர்ச்சியை பெறுவீர்கள். கேது விசாக நட்சத்திரத்தில் சாதகமாக அமரும் காலம் பொற் காலமாக அமையும். பொருளாதாரமும், தொழிலிலும் நல்ல வளர்ச்சி பெறுவீர்கள். ராகு நட்சத்திரத்தில் இருக்கும் போது கேதுவால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேரும். நினைத்தபடி எதையும் செய்ய முடியாத படி சில தடை வரும் அதை உங்களின் தனி திறமையால் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் நட்சத்திரத்தில் கேது இருக்கும்போது உடல் பலமும். மன வலிமையும் உங்களின் ஒவ்வொரு செயலிலும் சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கும் பொருளாதார நிலை மேன்மை அடையும்.

பரிகாரம்:
 
செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு வேப்பெண்ணெய் தீபமிட்டு அரளி பூ அல்லது சிவப்பு நிற பூவை வைத்து வழிபாடு செய்து வர, எடுக்கும் அனைத்து காரியமும் சிறப்பாக அமையும். தொழிலில் நன்மை பெறுவீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554