2022 - 2023 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம்

எண்ணங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் துலாம் ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு இதுவரை தன ஸ்தானத்திலிருந்த கேது ராசியிலும், அட்டமத்திலிருந்த ராகு களத்திர ஸ்தானத்திலும் அமர்வது நாகதோசம் என்றாலும் கூட, கடந்த காலத்தை போல எல்லா வெற்றியிலும் காரிய தடை இனி இருக்காது. வரும் 21.03. 2022 முதல் கேது ராசியில் அமர்வதும், களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வது தடைகளை செய்தாலும் காரியம் நிறைவேறும். 
 
எதிலும் உங்களின் நிலை மாறுபடும். ராகு கூட்டு தொழிலில் முன்னேற்றத்தையும் பங்கு சந்தை, வெளிநாட்டு தொழிலில் ஆர்வம் கொண்டு ஏற்றுமதியை ஊக்கபடுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலை உறுதியாகும். பாதியில் நின்ற காரியம் வேகமாக முன்னேற்றம் தரும். அமைதியான போக்கு நன்மையை தரும். கேதுவால் செயல்திறன் மேன்மையும் எடுத்த காரியம் வெல்லும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய செயல்பாடுகள் வளம் பெறும். காத்திருந்து எதையும் செய்யாமல் உடனே செயல்படுத்துவீர்கள். உங்களின் பூர்வீக சொத்து சம்மந்தமான செயல்பாடுகள் நடக்கும்.
 
இனி ராகு உங்களின் ராசிக்கு ஏழாமிடத்தில் அமர்வது திருமண தடையாக இருந்தாலும் இதே தோசமுள்ள வரன் அமையும். கார்த்திகை 1-ம் பாதத்திலும் ராகு அமரும் காலம் உங்களின் அரசியல் வாழ்க்கை நல்ல பலனை பெற்று தரும். அரசாங்க காரியத்தை வெற்றி கரமாக முடிப்பீர்கள். சுக்கிரன் நட்சத்திரத்தில் அமரும் காலம் நல்ல வரன் அமையும் பூர்வீக சொத்து சம்மந்தமான காரியம் வெற்றி யைத் தரும். குழந்தை பாக்கியம் சிலருக்கு அமையும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். கேது நட்சத்திரத்தில் ராகு இருக்கும் காலம் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். சிலருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நடுவ விடுவீர்கள்.
 
இனி கேது விசாக நட்சத்திரத்தில் அமரும் காலம் செல்வாக்கு பண பலம் உண்டாகும். உங்களின் திறமை வெளிபடும். ராகு நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் இனம் தெரியாத உடல் நலகுறைபாடு வந்து மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் செய்பவருக்கு பொருள் விரையம் இருக்கும் எதையும் ஆலோ சிக்காமல் நீங்கள் செய்த காரியத்தை நினைத்து வருத்தம் கொள்வீர்கள்.

பரிகாரம்: 
 
வெள்ளி / செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்து புனித நீராடி மூன்று முறை கோவிலில் வலம் வந்து தீபமேற்றி வர உங்களின் தடை நீங்கி நன்மை பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554