2022 - 2023 ராகு / கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2022 - 2023 ராகு / கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2022 - 2023 ராகு / கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்
21.03.2022 முதல் 22.09.2023
 
இந்த ஆண்டு வரும் 21.03.2022 முதல் இதுவரை ரிஷப ராசியில் இருந்த ராகு, அன்று மாலை 03.13 மணிக்கு மேஷ ராசியில் கார்த்திகை 1ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதுபோல 21.03.2022 முதல் இதுவரை விருச்சிக ராசியில் இருந்த கேது, அன்று மாலை 03.13 மணிக்கு துலாம் ராசியில் விசாகம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் மூலம் இனி வரும் காலங்களில் ராகு / கேதுவால் சில நன்மைகளும் சில தீமைகளும் உண்டாகும்.
 
ராகு செவ்வாய் வீடான மேஷத்தில் ஒன்றரை ஆண்டு காலம் இருப்பது. ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையும், சிலருக்கு அதன் மூலம் பொருளாதார நெருக்கடியும் உண்டாகும். தெரிந்த நபர்களிடம் ஏமாறும் சூழ்நிலை உண்டாகும். காலத்தை கருதி எதையும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செயல்படுவதன் மூலம் வரும் தொழிலில் இருக்கும் கஷ்டமான நிலைமைகளை சரி செய்து கொள்ளலாம். கிரானெட் கல், உளுந்து, எள், நிலக்கரி போன்ற பொருட்களும் தட்டுபாடும், விலை ஏற்றமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு சில கட்டுபாடுகளால் விற்பனை குறைவாக இருக்கும். அரசியலில் சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு கிட்டும். அனல் மின் நிலைய உற்பத்தி அதிகரிக்கும். பாதுகாக்க வேண்டிய பொருட்களுக்கு கவன குறைவால் பறிபோகும். கிரிமினல் சட்ட வல்லுநர்கள் தன் வாத திறமைகளை நிரூப்பிப்பார்கள்.
 
கேது சுக்கிரன் வீடான துலாத்தில் ஒன்றரை ஆண்டு காலம் இருப்பது. மாற்றுதல், அபகரித்தல், பொய் சொல்தல், உண்மைக்கு புறம்பான செயல்களை செய்து பணம் பறித்தல் போன்ற செயல்கள் நடக்கும். எதிலும் காரணமில்லாமல் செயல்படுவது பின்பு அதில் மாட்டிகொள்வது மக்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையாக மாறும். சிமெந்து, நவதானியம் தயாரிப்பு உற்பத்தி குறைவாக இருக்கும். பெயிண்ட், சிற்ப வேலைகளில் கைதேர்ந்த வல்லுநர்கள் கூட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். எதற்கு துணிந்து செயல்படுபவர்கள் மட்டும் சில விடயங்களில் சாதித்து காட்டுவீர்கள். தொலை தொடர்புகளை விண்வெளி ஆராய்ச்சிகளில் சில காரியங்கள் எதிர்பார்த்த காலத்தைவிட தாமதமாக இருக்கும். சிலருக்கு மறதிகளால் தொல்லையும், தலையில் பிரச்சனைகளும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
 
வெடி மருந்து, சமூக கேடு விளைவிப்பாளர்கள் பலருக்கு போதாத காலமாக அமையும். சட்ட விரோத செயல்கள் செய்பவர்கள் அடக்கு முறை ஆட்சி செய்து வருபவர்களுக்கு தைரியமாக அவர்கள் எதையும் செய்ய முடியாதபடி நெருக்கடிகள் உண்டாகும்.

R.ஆனந்தன்
கணித்தவர் - வாடிப்பட்டி
+91-9789341554