ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - தனுசு
விருப்பத்திற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து, தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து நன்மையை தருகிறார்கள். எதையும் தொடர்ந்து வழிநடத்தி செல்லும் வல்லமையைப் பெறுவீர்கள்.
கேந்திரத்தில் ராகு - கேது அமர்வது உங்களுக்கு நன்மையை தரும். அத்துடன் உங்களை ஊக்கப்படுத்தும் சனி யோக சனியாகவும், உங்களின் ராசிநாதன் குரு பார்வை பெறுவதும். உங்களுக்கு மேலும் நன்மையைப் பெற்றுத்தரும்.
எதை செய்தாலும் அதில் கவனம் செலுத்துவீர்கள். பணபலமும், ஆட்பலமும் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கப் பெறுவீர்கள். சுயதொழில் செய்து வருபவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சுகஸ்தானத்தில் ராகு அதிக அலைச்சலை கொடுத்தாலும், அதன் மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். சொல்லிலும், செயலிலும் வலிமையை பெறுவீர்கள். அரசியலிலும் உங்களின் செல்வாக்கு உயர்வைத் தரும். பதவி, அந்தஸ்து, தனி திறமை கொண்டு நற்பலன்களை அடைவீர்கள்.
உங்களின் நட்பு வட்டாரத்தில் பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவார்கள். கடந்த கால பல இழப்புகளை சரி செய்யும் வாய்ப்புகள் அமையும். கலை துறையில் சாதனை படைப்பீர்கள். பலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.
முக்கிய வழிகளில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வங்கி மூலம் கடன் பெறுதல், தொழிலில் முதலீடுகளை வலுப்படுத்துதல் உறுதியான நல்ல செயல்பாடுகள் மூலம் ஆதாயம் அடைதல், நல்ல வளர்ச்சிக்கு வழி கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி, நன்மை பெறுவீர்கள். சாதுர்யமான பேச்சுகள் மூலம் உங்களின் காரியத்தை செயல்படுத்தி வளமை பெறுவீர்கள்
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் வழிபாடும், உங்களுக்கு தொழிலிலும் சகல காரியங்களிலும் நன்மையைஙத தரும்.