ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - மீனம்
ஆன்மீகத்திலும், பொது நலனிலும் மனஅமைதி பெறும் மீன ராசி வாசகர்களே!
இந்த ராகு - கேது பெயர்ச்சி வரும் 08.10.2023 முதல் உங்களின் ராசியில் ராகுவும், ஏழாமிடத்தில் கேதுவும் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளில் பலன் தருவார்கள். ஜென்ம ராகுவால் சிலருக்கு ஞாபக மறதிகள் வரும் என்பதால் நாளைய தினம் செய்ய வேண்டிய விடயங்களை எழுதி வைத்து கொண்டு செயல்படுவதன் மூலம் திட்டமிட்டபடி காரியங்களை செயல்படுத்தி காண்பீர்கள்.
எதிர்கால திட்டங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். குரு வீட்டில் ராகு என்பதால், உங்களுக்கு குரு தரும் அனைத்து பலன்களையும் ராகு உங்களுக்கு வழங்குவார்.
முக்கிய பிரமுகர் சந்திப்பு மூலம் உங்களின் நீண்ட நாட்கள் பிரச்சனை முடிவுக்கு வரும். எடுத்த வைக்கும் காரியங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு தகுந்த உதவிகளும் நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சாதுர்யமான பேச்சு மூலம் சிலருக்கு காரிய அனுகூலம் கிடைக்கும். ஏழாமிட மான சாதக ஸ்தானத்தில் கேது அமர்ந்து பாதகத்தை கொடுப்பது உங்களுக்கு நன்மை உண்டாகும். திருமண காரியம் தடைபட்டு நடக்க ஆரம்பிக்கும் புத்துணர்வுகளுடன் செயல்படுவீர்கள்.
அரசியல் சம்மந்தமாக விடயங்களில் ஆர்வம் இல்லை என்றாலும் சிலருக்கு அதில் ஈடுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்களின் உறவுகள் புதுப்பிக்கபட்டு நட்புறவு கொள்வீர்கள்.
கலை துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களின் உயர் கல்வி மேன்மை பெற்று வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
பரிகாரம்:
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், கருடன் மூல மந்திரம், சொல்லி வர, உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை தரும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும்.