ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - மேஷம்
வளமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!
இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களின் வாழ்வில் உன்னதமான நிலையை அடைய செய்யும். உறுதியும், தெளிவும் கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் ராசிக்கு ராகு பன்னிரெண்டிலும், கேது ஆறாமிடத்திலும் அமர்வது நற்பலன்களை தரும்.
ராகுவால் விரையஸ்தானம் கெட்டு போகும். இதனால் தேவையற்ற விரைய செலவுகள் குறையும். அதுபோல வெளிநாடு செல்ல முயற்சிகளை செய்து வருபவருக்கு நல்ல வேலையுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சுற்று பயணங்கள் செல்லவும் வாய்ப்பு அமையும்.
முதியவர்களாக இருந்தால் நல்ல ஓய்வும், குடும்ப நபர்களுடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும் பெறுவீர்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நடக்கும். கேது ஆறாமிடத்தில் அமர்வது உடல் நலனின்றி இருப்பவர்களும் நீண்ட நாட்கள் என்ன நோய் என்று ஆராய முடியாமல் இருப்பவர்களும் நோய் அறிந்து, வைத்தியம் செய்து சரி செய்து கொள்வீர்கள். காரணமில்லாத கடன் சுமைகள் குறையும்.
உங்களை வெறுத்து ஒதுக்கியவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களை ஏமாற்றி வருபவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். ஆன்மீக தகவல்கள் உங்களுக்கு நல்ல பலனை தரும். சட்ட ரீதியான சவால்களை சந்திக்க வேண்டி வரும். நிரந்தரமான வருமானத்திற்கு வழியைப் பெறுவீர்கள்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு வர, சிறப்பான மேன்மை உண்டாகும்.