ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - மிதுனம்
வெளிப்படையான பேச்சால் சாதிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
இந்த ராகு - கேது பெயர்ச்சி 08.10.2023 முதல் ஒன்றரை ஆண்டு காலம் தொழில் ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் கேதுவும் அமர்வது கேத்திரத்தில் அமர்வது நற்பலன்களை பெற்று தரும். எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை தேடி வரும்.
முக்கிய காரியங்களுக்காக சிலர் வெளியூர் சென்று வருவீர்கள். எந்த முடிவும்உடனே எடுக்காமல் யோகித்து செயல்படுவீர்கள். அன்பர்களுக்கு வேலைக்கான விசா விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள். சுமையாக இருந்த காரியங்கள்... வெகு விரைவல் நடந்தேறும்.
மீனவர்களுக்கு நல்ல வருமானமும், புதிய படகுகள் வாங்க உதவிகளும் கிடைக்கும். அரசியலில் சிறந்த ராஜதந்திரியாக இருந்து செயல்படுவீர்கள். சுகஸ்தானத்தில் கேது அமர்வது தாயார் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும்.
உங்களின் உடல் நலனில் இனம் தெரியாத சில உடல் உபாதைகள் உண்டாகும். விரைவில் சரியாகும். ஒரு வேலையை பல முறை சென்று பார்க்கும்படி அமையும். வாகனம் பழுது நீங்குதல் புதிய வாகனம் வாங்கும் போன்றவை நடக்கும். எதிர்பார்த்த காரியத்தில் உங்களின் நண்பரின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
பொருளாதாரத்தில் சிலருக்கு தன்னிறைவு உண்டாகும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்வீர்கள். சட்ட ரீதியான எந்த விடயங்களையும் துணிச்சலுடன் செய்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக நாட்டத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
மனைவி உங்களிடம் சிறு மனவருத்தம் கொண்டாலும், அது நீடிக்காது. பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி காலங்களில் நாக தேவதைகளுக்கு விளக்கேற்றி அரளி பூ அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்வதன் மூலம் சகல காரியமும் வெற்றியைத் தரும்.