ராகு - கேது பெயர்ச்சி 2023 முதல் 2025 வரை - பொது பலன்கள்
வரும் 08.10.2023 அன்று மாலை 03.40 மணிக்கு ராகு பகவான், மேஷத்திலிருந்து மீன ராசியிலுள்ள ரேவதி 4-ம் பாதத்திற்கும், கேது விருச்சிக ராசியிலிருந்து கன்னி ராசியிலுள்ள சித்திரை நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இதன் மூலம் கால புருச தத்துவப்படி ஆறாமிடத்தில் கேதுவும், பன்னிரெண்டாமிடத்தில் ராகுவும் அமர்ந்து ஒன்றறை ஆண்டு காலம் பலன் தருகிறார்கள். எப்பொழுதும் எதிரெதிர் திசையில் இருவரும் பயணம் செய்வதால் தனித்தனியே பலன்களை தருவார்கள்.
உலக நாடுகளின் வளர்ச்சி, வர்த்தகம், ஆன்மீகம், இதற்கு இருவரும் பொறுப்பாக இருப்பதால்... எதிலும் திறம்பட செயல்படும் சுறுசுறுப்புகள் இருக்கும். போதை பொருட்கள் அழித்து விடுவது, கடத்தல் காரர்கள் பிடிபடுவது, காவல் துறையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
சிறு குற்றத்திற்கு பல நாடுகளில் பெரிய தண்டனையை அடைய வேண்டி வரும். யோக மார்க்கத்திற்கு செல்வதற்கான பலவிடயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். முதலீடு இல்லாத கமிசன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தங்கம் விலை மேலும் உயரும்.
புதிய கப்பல்கள் அறிமுகபடுத்தபடும். மீன் வளம் பெருக்க நடவடிக்கைகள் உண்டாகும். மலை பிரதேசங்களில் அடிக்கடி அக்னி மூலம் சில அழிவுகள் உண்டாகும். பனிபாறைகள் உருகி திடீர் வெள்ளம் உண்டாகும். மருத்துவமனைகளில் நவீனமாக்கபட்ட உதவிகள் கிடைக்கும்.
மறைமுக வியாபாரம் பல நாடுகளில் சூடு பிடிக்கும். புற்றுநோயிற்கு புதிய மருந்து கண்டுபிடித்து குணப்படுத்தபடும். வெளிபுற தோற்றத்தை வைத்து எதை செய்தாலும் தோல்விகளாக இருக்கும். புதிய நோய் பரவி பல நாடுகள் பாதிக்கப்படும்.