2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கடகம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கடகம்

வளமான வாழ்வை தேடி அமைத்துக் கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சி வரும் 22.04.2023 முதல் தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும், சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை, உங்களின் ராசியில் குரு உச்சம் பெறுவதால் குரு பார்க்குமிடம் சிறப்பு.

உங்களின் பொருளாதார நிலையில் நல்ல வளம் கிடைக்கும். குடும்ப தேவைகளுக்கு பண வரவு கிட்டும். ஏற்கனவே உங்களின் ராசிக்கு அட்டம சனி தாக்கம் இருப்பதால், யாருக்கும் பிணையமிடுவதும், கடன் பெற்று தருவதும் தவிர்த்து விடுவது நல்லது.

வாங்கிக் கொடுத்து கஷ்டபடுவதைவிட, கொடுக்காமல் அவரின் பகையை அடைவது நல்லது. வரவுக்குள் செலவு செய்யும் திட்டத்தை வகுத்துக் கொள்வதும், தகுதிக்கு மேல் முதலீடு செய்து, கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்து கஷ்டபடுவதையும் தவிர்த்து விட்டு, சிறியதாகவே இருந்தாலும் அதில் தொழிலில் முன்னேற என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து செயல்படுவதும்.

உங்களின் நற்பலன்களுக்கு வழிவகுக்கும். உங்களிடம் கடன் வாங்கி சென்றவர் தாமதமாக தருவதும், நீங்கள் வாங்கிய இடத்தில் உங்களுக்கு நெருக்கடியும் உருவாகும் என்பதால் சிறுக கட்டி பெருக வாழ்வது நல்லது. உடன் பிறந்தவர்களின் மூலம் எந்த பயனும் இருக்காது. தாயார் வழி சொத்து சிலருக்கு முடியும் தருவாயில் சில தடங்கல் வந்து தாமதமாகும்.

அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு தக்க வைத்து கொண்டாலும், உங்களின் போட்டியாளர்களால் சில மனஉலைச்சலுக்குள்ளாக வேண்டி இருக்கும்.  ஆடம்பர பொருட்கள் மீது மோகம் உண்டாகும். இதனால் சிலர் புதிய கடன்படி வேண்டிவரும். புத்திரர்களின் மூலம் சிலருக்கு வருமானம் கிடைக்கும். உறுதியுடன் எதையும் செய்து வந்தால் உங்களின் வாழ்வில் செழிக்கலாம்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் வைரவருக்கு மஞ்சள் பட்டு துணி கட்டி மூன்று நெய் தீபமிட்டு வேண்டிக் கொண்டுவர உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.