2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கன்னி

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கன்னி

கனிவான பேச்சால் கவலையை மறக்கச் செய்யும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சி இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு, இனி வரும் 22.04.2023 முதல் உங்களின் தன ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் விரைய ஸ்தானத்தையும் பார்ப்பது நல்ல பலனை பெற்றுத் தரும்.

உங்களின் ராசிக்கு பாதாகாதிபதியான குரு எட்டாமிடத்தில் மறைவு பெறுவது நல்ல பலனைத் தரும். அத்துடன் அட்டம குரு பார்வை விரைய ஸ்தானத்தில் அமைவது சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தைத் தரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் நினைத்ததை சாதித்து கொள்ளும் திறமையைக் கொள்வீர்கள். இதுவரை வீடு கட்ட எண்ணி வந்த நீங்கள், இனி அதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களின் தேவைகளுக்கு பணவரவு இருக்கும்.

எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் நீங்கள், உறுதுணையாக உங்களின் நண்பரின் மூலம் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் வளம் பெற என்ன தேவைகளோ.. அதனை அடையும் முயற்சி நன்மையைத் தரும். சிறு பாதிப்பைக் கூட தாங்கிக் கொள்ளமாட்டீர்கள்.

கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உறவு, நண்பர்களாக இருந்தாலும் தங்க நகையை கொடுப்பதும், அவர்களிடம் வாங்கி செல்வதும் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை தரும். அறிவியல் பூர்வமான சில செயல்பாடுகள் மூலம் நற்பலன் கிடைக்கும். அவசரத்தில் எதையும் செய்யாமல் நிதானம், பொறுமையுடன் செய்தால் எதிலும் வெற்றியைத் தரும்.

உங்களின் சொந்த காரியங்களுக்கு பிறர் உதவியை நாடாமல் நீங்கள் செய்து கொள்வது நல்லது. கலைஞர்களின் வாழ்க்கையில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். நல்ல வாழ்க்கை சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். உரிய நேரத்தில் உங்களின் செயல்பாடுகள் நல்ல பலனைத் தரும். வெளிநாடு பயணம் சிலருக்கு உறுதியாகும்.
 
பரிகாரம்:
 
வியாழன் அன்று ராகு காலத்தில் அல்லது காலை 06.00 - 07.00-க்குள் நவகிரக குருவுக்கு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல வித காரியமும் நன்மையும், வெற்றியையும் தரும்.