2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கும்பம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - கும்பம்

விரும்பியதை அடைய தீரமுடன் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு வரும் 22.04.2023 முதல் குரு பெயர்ச்சி உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து, ஏழாமிடம், ஒன்பதாமிடம், லாபஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் வாழ்க்கையின் மேன்மை அடைய சில உத்திகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

முக்கிய விடயங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்து வரவேற்பு பெறுவீர்கள். நல்ல காரியத்தை தள்ளி போடாமல் சீக்கிரமாக செய்து வளம் பெறுவீர்கள். இதுவரையிலும் பல்வேறு காரணங்களால்... தடைகளால் தள்ளி போன திருமணம் இனி கைகூடும். சில காலம் சென்ற பின்பு உங்களின் கல்வி திறனுக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும்.

சொந்த தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புது உத்தியுடன் செயல்பட்டு வெற்றியை கண்டு முன்னேற்றம் காண்பீர்கள். கலைதுறையினருக்கு சிறந்த வரவேற்பும், புதிய வாய்ப்புகளும் வந்து மனமகிழ்ச்சியுடன் இருந்து வருவீர்கள்.

அரசியலில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நலலவர்களின் சேர்க்கையும், நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த தொடர்பும். உங்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வளர்ச்சியும், விரும்பிய பாடத்தில் அமைதியும் கிடைத்த வளம் பெறுவீர்கள்.

விவசாய தொழிலில் சில நேரம் வருமானம் குறையும். விலை வீழ்ச்சி அமையும். தினமும் நல்ல நண்பர்களின் மூலம் புதிய தகவல்களை பரிமாறி கொண்டு அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்தி கொள்வீர்கள்.  ராகு சம்மந்தமான காரியம் சில காலம் தாமதமாக நடக்கும். பணபழக்கம் இருக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி மிளகு கலந்த உணவுகளை நைவேத்தியம் வைத்து, வேண்டிக் கொள்ள, எல்லாம் காரியமும் வெற்றியைத் தரும்.