2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மிதுனம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மிதுனம்

வாழ்வை வளமாக்கி கொள்வதை விரும்பும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த குரு பெயர்ச்சி, இதுவரை தொழிலில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு 22.04.2023 முதல் வருகிறார். இதுவரை பல்வேறு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் மறைந்து நன்மை பெறுவீர்கள்.

தனித்துவமான உங்களின் செயல்பாடுகளில் இருந்து வந்த சில தயக்கம் இனி மறைந்து, வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள். தொழிலாக இருந்தாலும், உத்தியோகமாக இருந்தாலும் மனநிறைவுகளின்றி இருந்த வந்த நிலை மாறி நன்மைகளை பெறுவீர்கள்.

வெளிநாடு சென்று வருவதில் இருந்த சிக்கல்களில் இருந்த தடை நீங்கும்.  எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களின் வளர்ச்சிக்கு இருந்த தடை நீங்கி வளம் பெறுவீர்கள். முதலீடுகள் இல்லாத தொழில் செய்து வருபவருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். நீண்ட நாட்கள் புத்திர பாக்கியமின்றி இருந்தவருக்கு புத்திரபாக்கியம் கிட்டும். குல தெய்வ வழிபாடு மூலம் உங்கள் வேண்டுதல்கள் இனி நிறைவேறும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவருக்கு வேலை கிடைக்கும்.

கூட்டுத் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்கள் உங்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையப் பெறும்.

தங்க நகைகள் புதுப்பித்தல், புதிதாக வாங்குதல், அடவு நகைகள் மீட்டுதல் போன்ற செயல் நன்மைமையைத் தரும். திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் முயற்சிகள் கைகூடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். புதிய தொழிலில் நல்ல தொழிலாளர்கள் அமைத்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணிக்கு விநாயகர் வழிபாடும், நவகிரக குரு வழிபாடும் செய்து வர, பொருளாதாரத்தில் உச்சம் பெறுவீர்கள்.