2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மேஷம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - மேஷம்

நிறைந்த மனம் கொண்டு எதையும் செயல்படுத்தும் மேஷ ராசி வாசகர்களே!
 
இதுவரை விரைய குருவாக இருந்த குரு, இனி 22.04.2023 முதல் ஜென்ம குருவாக ராசியில் அமர்வதும் ஐந்தாமிடம், ஏழாமிடம், ஒன்பதாமிட பார்வை பெறுவதும், உங்களின் ராசிக்கு சிறந்த நற்பலன்களைப் பெற்று தருவார். 
 
கடந்த காலத்தில் விரைய குரு நிறைய புதிய செலவுகளை செய்ததுடன், அடிக்கடி எதிர்பாராத இழப்பு, கடன் சுமைகளிலிருந்து வந்தீர்கள். தீர்வு என்று ஒன்று இருந்தாலும் உங்களின் முயற்சிகளால் பல தடவை நடக்காமல் போய் விட்டது. இனி அந்த கவலை வேண்டியதில்லை. 
 
வீட்டு கடன்களும், தொழில் கடன்களும், விவசாய கடன்களும் நீங்கள் முயற்சி எடுத்தால் நல்ல படியாக அமையும். குரு உங்களின் பாக்கியாதிபதி என்பதால், குரு பார்வை பாக்கியஸ்தானத்தில் அமைவது உங்களின் சில காரியத் தடைகள் நீங்கி செயல்பட ஆரம்பிக்கும். 
 
முக்கிய காரியங்களில் கவனம் செலுத்தி, உடனே செயல்படுத்துவீர்கள். நீண்ட நாட்கள் தீராமல் இருந்த கடன் படிப்படியாக குறையும். வாழ்க்கையில் இதுவரை தொலைத்த விடயங்களை மீண்டும் புத்துயிர் பெற செய்வீர்கள். தங்க நகைகள் அடவு மீண்டு திரும்ப வீடு வந்து சேரும். 
 
வெளிநாட்டு தொடர்புகள் மூலம் சிலருக்கு வேலை வாய்ப்பும் சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பும் அமையும். குடும்பத்திலிருந்த சச்சரவு நீங்கி உறவுகள் பலப்படும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் வளம் பெறும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி, உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் அனைத்தும் நிறைவேறும்.