2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - விருச்சிகம்

2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - விருச்சிகம்

எதையும் தயக்கமின்றி செயல்படுத்தி நன்மை பெறும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இதுவரை குரு உங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து வந்தார். இனி வரும் 22.04.2023 முதல் குரு மேசத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் உங்களின் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சில தாமதம் உண்டாகலாம்.

உரிய காலத்தில் செயல்படுவதில் தடைகள் உண்டானாலும், உங்களின் ராசிநாதனின் தயவால் எதிர்பார்த்த பலன்களை வெல்லும் வல்லமை பெறுவீர்கள். இருந்தாலும் உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி இருப்பதும், குரு பார்வை இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை கைவிடுவது நல்லது.

புதிய தொழில் வாய்ப்புகளை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. உங்களின் சுய ஜாதகத்தில் பலம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவருக்கு அடிக்கடி ஏதாவது தொல்லை வந்தாலும், அதனை எதிர்கொண்டு வெல்வீர்கள். 

உங்களுக்கு வரும் துன்பத்தை நீக்கிட வழிவகுத்து கொள்வது நல்லது. முக்கிய விடயங்களில் உங்களின் கவனம் முழுவதும் செலுத்தி, அதில் எந்தவித சிக்கலும் வராமல் பார்த்து கொள்வீர்கள். உங்களின் அருகில் இருப்பவரை எப்பொழுது கண்காணித்து வருவது நல்லது.

வெளியிலிருந்து உங்களுக்கு தொல்லை இல்லை. உங்களை சுற்றியே இருப்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மனதிற்கு பிடித்த காரியத்தை தடை போடாமல் துணிந்து செயல்படுங்கள்.

உங்களின் பக்கம் வெற்றி நிச்சயம். உண்மை இருக்கும் பக்கம் எல்லாம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வது தள்ளி போடுவது நல்லது. நீங்கள் குறித்த காலத்தில் செயல்படுவதன் மூலம் காரியத்தில் கூடுதல் பலனைப் பெறுவீர்கள். தொழிலாளர்க்களில் கோரிக்கை, வெற்றியைப் பெற்று தரும்.

பரிகாரம்:
 
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் உங்களின் குல தெய்வ வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வழிபட்டுவர, உங்களின் அனைத்து காரியமும் வெற்றியை பெற்று தரும்.