சோபகிருது தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்

சோபகிருது தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்

சித்தர்களால் எழுதப்பட்ட பாடலில் சோபகிருது புத்தாண்டு, எப்படி என்பதை அறியலாம். இந்த ஆண்டு ராஜா-புதன், சேனாதிபதி-குரு, மந்திரி-சுக்கிரன்.. முக்கியமான சில காரியங்களில் அடிக்கடி தடைப்பட்டு மேலும் மக்களுக்கு கஷ்டத்தை தந்தாலும், ராஜா புதன் என்பதால்.. அறிவு பூர்வமான விடயங்களில் முன்னேற்றமும், புதிய கண்டுபிடிப்புகளும் இருக்கும். 
 
 
  
அண்டை நாடுகளின் சகோதரத்துவம் மூலம் நாட்டின் முன்னேற்றம் உண்டாகும். கிழக்கு கடற்கரையில் அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகும். சூரியன் / புதன் / ராகு மேசத்தில் அமர்ந்திருப்பது புதிய வியாதிகள்.. பறவையின் மூலம் வரலாம் என்பதால், சற்று கவனமாக இருப்பது நல்லது. சேனாதிபதி குரு என்பதால் தங்கம் விலை மிகவும் உயரும். இதனால் டொலரின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும். புதிய கரன்சி வெளியிட முடியாமல் பணபுழக்கம் குறையும் மற்ற உலோகங்களின் விலை சற்று குறையும். சில இடங்களில் மழையின் தாக்கம் குறைவாகவும் இருக்கும். ஆவணி, புரட்டாசியில் நல்ல மழையும், பிற மாதங்களில் லேசான மழையும் இருக்கும். ஆன்மீகத்தில்.. அனைத்து மதத்தினரும் தங்களில் கடவுளை வணங்குவார்கள். (முன்னாள்) பதவியில் இருந்தவர்களுக்கு புதிய விசாரணை வரும். இதனால் அரசியலில் புதிய சகாப்தம் உண்டாகும். எளிதில் மக்கள் மத்தியில் அரசியல் புரட்சி உருவாகும். 
 
உணவு பண்டங்களின் விலை குறையும். பால்மா பொருட்கள் உற்பத்தி அதிகரித்து..பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். தேயிலை, தேங்காய் விற்பனை வெளிநாட்டு ஏற்றுமதியின் மூலம் அன்னிய செலாவணி அதிகரிக்கும். மீன் பிடிக்கும் உரிமைகள் சமரச முயற்சிகளால் சில முக்கிய ஆலோசனைகள் மூலம் அண்டை நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு உண்டாகும் வெளிநாட்டு கடன் மூலம் நாட்டின் சகஜ நிலை திரும்பி, வளம் பெறும்.
 
இறை வழிபாடுகள் தொடர்ந்து செய்து வந்தால்.. நாடு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு நன்மை பெறும்.