சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மிதுனம்

திறமையும், வளமையும், உறுதியும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு லாபஸ்தானத்தில் அமர்வதும், ஆவணியில் ராகு / கேது பெயர்ச்சி மூலம் தொழில் வளர்ச்சியும், அமைய பெறுவீர்கள்.
உங்களின் யோகாதிபதி சனி பகவான் உங்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கு வளம் பெற செய்வார். உங்களின் தொழிலில் இருந்த பின்னடைவு மேன்மை பெறும். இதுவரை அட்டம சனியால் குடும்பத்திலும், தொழில் செய்யுமிடத்திலும் பல்வேறு பாதிப்புகளை அடைந்து வந்ததிலிருந்து விடுபட்டு, தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பவனி வருவீர்கள். கலைதுறையினருக்கு புதிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் பெறுவீர்கள். பணியிலிருந்து புதிய இடத்திற்கும் பதவி உயர்வு பெற்றும், ஏற்றம் பெறுவீர்கள். உங்களின் முயற்சிக்கு பக்கபலம் கிடைக்கப் பெறுவீர்கள்.
குரு லாபஸ்தானத்தில் வருவதால் உங்களின் செயல்களில் வேகமும் வெற்றியையும், பொருளாதார மேன்மையும் அடைய பெறுவீர்கள். வீடு கட்டுதல் காணி வாங்குதல், தங்க அணிகலன் வாங்குதல் வங்கி கடன் மூலம் தொழில் வளர்ச்சி பெறுதல் போன்ற நல்ல பலம்களை தொடர்ந்து பெறுவீர்கள். உங்களின் புத்திரர் வேலை வாய்ப்பையும், உயர் கல்வி வளர்ச்சியையும் பெறுவார்கள். கடன் தீர்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
ராகு / கேது பெயர்ச்சிக்கு போன்ற உங்களின் வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். முக்கிய தொழில் வாய்ப்புகள் உங்களை தேடிவரும். மன தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் வளம் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல் நல குறைபாடு சரியாகும். மருத்துவத்தின் மூலம் உடல் நலன் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 5, 8.
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளின் மகாலெட்சுமி வழிபாடு நெய் தீபமிட்டு வழிபடுவதும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களை ஊக்கபடுத்தும்.