2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - சிம்மம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - சிம்மம்

நம்பியவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சிம்ம ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல் இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு பகவான் இனி தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், ஆறாமிடத்தையும் பார்ப்பதாலும். உங்களின் தொழில் ஸ்தானத்திலும் அமர்வதாலும் நன்மையும் உண்டாகும். மேலும் உங்களுக்கு குருவால் சமபலன்கள் அதாவது  லாப நஷ்டங்கள் இரண்டும் இருக்கும்.
 
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது போல தனஸ்தானத்தின் குரு பார்வையால் உங்களின் பொருளாதார வளர்ச்சி மேன்மை பெறும். சிறந்த பொருளாதார நிபுணர் போல மனத்தில் கணக்கு போடுவீர்கள். தேவைகளுக்கு உதவியும் கிடைக்கும். பொருளாதாரத்தில் பலரும் பங்குபற்றுவார்கள். சுகஸ்தானத்தை குரு பார்வை இருப்பதால் உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும்.
 
கடந்த கால உடல் நல குறைபாடுகளிலிருந்து விடுபட்டு, மருத்துவத்தாலும், சித்த மருத்துவத்தாலும் உடல் நலனில் முன்னேற்றம் பெறுவீர்கள். வீடு, மனை பராமரிப்பு, வீடு கட்டுதல், வீட்டு கடன் பெறுதல், மனை வாங்குதல் போன்ற காரியங்களில் முயற்சி செய்தால்... நல்ல பலன் கிட்டும். இதுவரை கடன் பட்ட நிலைமாறி, உங்களின் கடன் முழுவதும் தீர்த்து, வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள்.
 
தொழிலுக்காக கடன் படவேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு உண்டாகும். ஆன்மீக நாட்டம், பொது விடயங்களில் அக்கறை கொள்தல் போன்றவை ஏற்படும். தான தர்ம காரியங்களில் சிலர் ஈடுபாடுக் கொள்வீர்கள். ஆலய பணிகள் சிலருக்கு கடமையாக அமையும். மனதில் பட்டதை வெளிபடுத்தி முக்கிய பங்குகளை உருவாக்குவீர்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைகடலை மாலை, மஞ்சள் தூள் அர்ச்சனை செய்து வழிபட்டு, தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள.. சகல காரியமும் நினைத்தபடி நடக்கும்.