குரோதி தமிழ் புத்தாண்டு பொதுப் பலன்கள் 2024
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - இந்த ஆண்டு துவக்கத்தில் விருச்சிக லக்னம் என்பதால் கடல் சார்ந்த பகுதிகளில் நல்ல மழை பொழியும். ஆறாமிடத்தில் சூரியன் உச்சம் பெற்று குருவுடன் இணைவது சகோதரர்களின் உடல் நலனில் பாதிப்பைத் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவது உயர் கல்வியில் சில மாற்றம் உண்டாகும். சனியுடன் செவ்வாய் இணைவு பெறுவது இனம் தெரியாத புதிய நோய்கள் உண்டாகும். மருத்துவ துறையில் சில சவால்களை சந்திக்க வேண்டி வரும்.
எட்டாமிடத்தில் சந்திரன் அமர்வது பண புழக்கம் குறையும். தொழிலில் சில கூட்டுத் தொழில் மந்த நிலை நீடிக்கும். லாப ஸ்தானத்தில் கேது அமர்வது வெளிநாட்டு இறக்குமதியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும். அன்னிய செலாவணிகள் அதிகரிக்க திட்டம் வகுக்கப்படும்.
மழை இந்த ஆண்டு தமிழகத்தைக் காட்டிலும் வெளி மாநிலங்களில் வெள்ளப் பெருகும். நீர் நிலைகளில் வீடு கட்டி இருப்பவர்களுக்கு சரியான பாதிப்பைத் தரும். மீன் வளம் நன்கு இருக்கும். விவசாயம் மழை பொய்த்தும் கெடும்... அதிக மழை பெய்தும் கெடும்... இந்த ஆண்டு அதிக உஷ்ணமும், கடும் குளிரும் இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் திடீர் கட்டுப்பாடுகளால் தன் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் போகும். தொழில் ஸ்தாபனங்களில் ஆண், பெண் இரு பாலருக்கும் வேலை வாய்ப்பு அமையும். காதல் திருமணம் அதிகரிக்கும்.
பரிகாரம்:
எல்லா ராசிகாரர்களும் பைரவர் வழிபாடு செய்வதும். பெருமாளுக்கும், சிவனுக்கும் உரிய காலங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்துவர நன்மை உண்டாகும்.