2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கும்பம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கும்பம்

நற்குணமும் நற்செயலும் கொண்டு விளங்கும் கும்ப ராசிவாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களினி ராசி ராசிநாதன் ராசியிலும் யோகாதிபதியாகிய சுக்கிரனுடன் இணைவு பெறுவதும் லாபாதிபதி வீட்டில் சூரியனும், சந்திரனும் இணைவு பெறுவதும். உங்களின் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். சில நேரம் அதில் மாற்ற உண்டாகும்.
 
உங்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். முதலீடுகள் இல்லாத தொழிலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இரண்டாமிட ராகுவும் எட்டாமிட கேதுவும் உங்களை ஒரு இடத்தில் இருக்க விடமாட்டார்கள். காலத்தை வீண்செய்யாமல் எதையாவது செய்து கொண்டே வரவேண்டும். குரு உங்களின் விரயஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் ஓரளவு உங்களுக்கு பாதிப்புகள் இன்றி செயல்படுவார்கள்.
 
எதையும் முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தபடி உங்களின் கடமையை செய்து வருவீர்கள். ஆறாமிடத்தின் செவ்வாய் உங்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி தருவார். குணம் இருக்கும் இடத்தில் தான் கோபம் இருக்கும் என்பது பொது நீங்கள் யார் மீது கோபம் கொண்டாலும் அது அவர் மீது அக்கறை கொண்டு செயல்படுவதாக அமையும்.
 
தொழில் ஸ்தானத்தின் பஞ்சாமாதிபதி புதன் அமர்ந்து தொழிலில் முன்னேற்றம் அடைய செய்ய உதவி செய்கிறார். ஓன்லைன் வர்த்தகத்தில் முதலீடு லாபகரமான சூழ்நிலை அமையும். கலைத்துறையினருக்கு ஆர்வம் இருந்தாலும் சனி வர ஆய்வு செய்யாமல் கலைத்துறையின் எதையும் சாதிக்க மாட்டீர்கள்.
 
முன் யோசனைகள்படி நடந்துகொள்வீர்கள் லாபஸ்தானாதிபதி சுகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உடல்நலன் ஒத்துழைப்பு தருவது கடினமாக இருக்கும். புதிய முயற்சிகள் தற்காலிமாக நிறுத்தி வைப்பது நல்லது. சகோதரர்களின் உறவுகள் சிறப்பாக இருக்காது. பொது வாழ்விலும், அரசியலிலும் உங்களின் லட்சியம் விரைவில் நிறைவேறும் இந்த ஆண்டு சோதனைகள் மறைந்து நன்மைகள் பலம் பெறும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
6, 8, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, பிப்ரவரி, மே, ஜுன், ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், வெண்மை, சிவப்பு.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், எள் கலந்த சாதம் நைவேத்தியம் வைத்து தொடர்ந்து வழிபட்டு வர இந்த ஆண்டு உங்களின் இலக்கை எளிதில் அடைந்து வெற்றி பெறும்.